Friday, 16 October 2015

அஷ்டமா சித்திகள், திருமந்திரமும் , பிராணாயாமமும்

திருமந்திரமும் , பிராணாயாமமும்

திருமந்திரம் என்னும் நூல் தமிழ் ஆகமம். ஆகமம் என்றால் வேதம் என்று பொருள். இந்த நூலை திருமூலர் என்னும் தவயோகி இயற்றியுள்ளார். மக்கள் வாழும் முறை மற்றும் கடவுளை காணும் முறையை அறிவியல் பூர்வமாக இயற்றியுள்ளார். திருமூலர் அஷ்டமா சித்திகள் பெற்ற தவயோகி ஆவார். அவர் இந்த நூலில் மக்கள் நூறு வயது முதல் மூவாயிரம் வருடம் வரை உயிருடன் வாழும் வழிகளை கூறியுள்ளார்.

மந்திரம் :
மூலன் உறை செய்த மூவாயிரம் தமிழ்.
ஞாலம் அறியவே நந்தி அருளது
காலை எழுந்து கருத்துஅறிந்து ஓதிடின்
ஞாலத் தலைவனை நண்ணுவர் அன்றே.

பொருள் :
திருமூலர் ஆகிய நான் உலக மக்களின் நன்மைக்காக மூவாயிரம் மந்திரங்களை (பாட்டு) கடவுள் அருளால் இயற்றியுள்ளேன். காலையில் எழுந்து கருத்தை அறிந்து படித்தால் கடவுளை அடையலாம்.
ஒவ்வொரு தமிழனின் வீடுகளிலும் திருமூலரின் புத்தகங்கள் இருப்பது அவசியம். திருமூலர் உடம்பை வளர்க்கும் மற்றும் அறிவை வளர்க்கும் முறைகளை பற்றி எழுதியுள்ளார். திருமூலரின் வரலாற்றை கூறிய பின் அவருடைய மந்திரங்களையும் அவற்றின் பொருளையும் கூறுவேன்.

திருமூலரின் வரலாறு :
திருமூலரின் உண்மையான பெயர் யாருக்கும் தெரியாது. அவர் மூலர் என்னும் உடலில் தங்கியதால் அப்பெயர் அவருக்கு வந்தது. தவயோகி ஒருமுறை காட்டு வழியாக நடந்துச் சென்றுக் கொண்டிருந்தார். அப்பொழுது கூட்டமாக மேய்ச்சலுக்கு வந்த மாடுகள் மிரட்சியுடன் நிற்பதை கண்டார். உடனே அருகில் சென்று பார்த்தார். அங்கே மாடு மேய்ப்பவன் இறந்துக் கிடந்தான். மாடுகள் கவலைப் படுவதைக் கண்டு மனமிறங்கினார் தவயோகி. உடனே மறைவான இடத்துக்கு சென்று தன்னுடைய அஷ்டமா சித்திகளை பயன்படுத்திக் கூடுவிட்டு கூடுபாயும் முறையில் தன் உயிரை மாடு மேய்ப்பவன் உடலில் செலுத்தினார். மாடு மேய்ப்பவன் உயிருடன் வந்தவுடன் மாடுகள் உற்சாகமாயின. மாலை பொழுது சாய்ந்தவுடன் மாடுகள் வீடு திரும்பின. மாடு மேய்ப்பவனும் பின்னே சென்றான். வீடு வந்தவுடன் மாடு மேய்ப்பவன் திரும்பினான். உடனே அவனுடைய மனைவி கையை பிடித்து இழுத்தாள். வீட்டுக்குள் வராமல் எங்கே செல்கிறீர்கள் என்றுக் கேட்டாள். உடனே மாடு மேய்ப்பவன் நான் உன் கணவன் இல்லை என்றுக் கூறினான். மாடு மேய்ப்பவனின் மனைவி நியாயம் கேட்பதற்காக ஊர் மக்களை அழைத்து வந்தாள். அங்கு மாடு மேய்ப்பவன் மண்டபத்தில் தவம் செய்துக் கொண்டிருப்பதைக் கண்டு இவன் உன் கணவன் இல்லை என்றுக் கூறினர். உடனே தவயோகி தன் உடலை மறைவாக வைத்திருந்த இடத்துக்குச் சென்றார். அங்கு அவருடைய உடலை காணவில்லை எங்குத் தேடியும் கிடைக்கவில்லை. உடனே அவர் கடவுள் நமக்கு புதிய உடலைக் கொடுத்திருக்கிறார் என்று அந்த மாடு மேய்ப்பவனின் உடலில் தங்கிவிட்டார். திருமூலர் காட்டிற்குள் அமர்ந்து இன்னும் இறக்காமல் தவம் செய்துக் கொண்டிருக்கிறார்.

முன்னுரை :
நான் திருமந்திரத்தில் இருந்து மனிதனின் உடலை எப்படி வளர்ப்பது என்பதனை பற்றி முக்கியமாகக் கூறுகிறேன்.

மந்திரம் :
உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர்
வளர்த்தேனே.

பொருள் :
உடம்பு அழிந்தால் உயிர் அழிந்து விடும். உடம்பில் நோய் இருந்தால் தெளிவாக சிந்திக்க முடியாது. ஏதாவது வேலையை ஏற்றுக் கொண்டால் சரிவர செய்ய இயலாது. ஆகவே உடம்பை வளர்க்கும் முறையை அறிந்துக் கொண்ட நான் உடம்பை சரியாகப் பேணி பாதுகாத்து உயிரையும் வளர்க்கிறேன்.

மந்திரம் :
உடம்பினை முன்னம் இழுக்கு என்று இருந்தேன்
உடம்பினுக்கு உள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில்கொண் டான்என்று
உடம்பினை யான்இருந்து ஓம்புக்கின் றேனே.

பொருள் :
இதற்கு முன்பு உடல் தேவையற்றது என்று நினைத்திருந்தேன். உடம்பிலே உயிராகிய கடவுள் இருப்பதைக் கண்டேன். ஆகவே உடலை இப்போது பேணிப் பாதுக்காத்து வருகின்றேன்.
உடலினை வளர்த்த திருமூலர் பிராணாயாமம் மற்றும் ஆசனத்தைப் பற்றிக் கூறியுள்ளார். நான் பிராணாயாமம் பற்றி மட்டும் கூறுகிறேன்.

பிராணாயாமம் :
பிராணாயாமம் என்பது மூச்சு பயிற்சி.

 அஷ்டமாசித்துக்கள்...அணிமா: பெரிய ஒரு பொருளை தோற்றத்தில் சிறியதாகக் காட்டுவது/ஆக்குவது. ப்ரிங்கி முனிவர் முத்தேவர்களை மட்டும் வலம் வருவதற்காக சிறு வண்டாக உருமாறினார் என்ற செய்தி அணிமா என்ற சித்தைக் குறிக்கும். மஹிமா:சிறிய பொருளைப் பெரிய பொருளாக்குவது. வாமன அவதாரத்தில் திருமால் இரண்டடியால் மூவுலகை அளந்ததும், க்ருஷ்ணன் அர்ஜூனனுக்கு உயர்ந்த வடிவம் காட்டி உலகமே தன்னுள் அடக்கம் என்று காட்டியதும்.

அஷ்டமா சித்திகள்

அஷ்டமாசித்துக்கள்...

அணிமா:
பெரிய ஒரு  பொருளை  தோற்றத்தில்  சிறியதாகக்  காட்டுவது/ஆக்குவது.
ப்ரிங்கி முனிவர் முத்தேவர்களை  மட்டும் வலம் வருவதற்காக சிறு வண்டாக உருமாறினார் என்ற செய்தி அணிமா என்ற சித்தைக்  குறிக்கும்.

மஹிமா:
சிறிய பொருளைப் பெரிய பொருளாக்குவது.
வாமன அவதாரத்தில் திருமால்  இரண்டடியால் மூவுலகை  அளந்ததும், க்ருஷ்ணன் அர்ஜூனனுக்கு உயர்ந்த வடிவம்  காட்டிஉலகமே தன்னுள் அடக்கம் என்று காட்டியதும் மஹிமா என்னும் சித்தாகும்.

லஹிமா:
கனமான பொருளை இலேசான பொருளாக ஆக்குவது.
திருநாவுக்கரசரை சமயப் பகை காரணமாக கல்லில்  கட்டி  கடலில்  போட்டபோது கல் மிதவையாகி  கடலில் மிதந்ததுலஹிமா ஆகும்.

கரிமா:
இலேசான பொருளை  மிகவும்  கனமான பொருளாக ஆக்குவது.
அமர்நீதி நாயனாரிடம் கோவணம் பெறுவதற்காக இறைவன்  வந்தபோது, ஒரு கோவணத்தின்  எடைக்கு தன்னிடமுள்ள எல்லா பொருட்களை வைத்தும்  தராசுத் தட்டு சரியாகாமல்  கடைசியாக  தானும்  தன்  மனைவியும்  ஏறி  அமர்ந்து  சரி  செய்த சித்தி கரிமா.

பிராத்தி:
எவ்விடத்திலும் தடையின்றி  சஞ்சாரம் செய்வது.
திருவிளையாடற் புராணத்தில் "எல்லாம் வல்ல சித்தரான படலம்"  என்னும்  பகுதியில் சிவன் ஒரே சமயத்தில்  நான்கு திசைகளிலும்  காட்சியளித்ததாக வரும்  சித்தி  பிராத்தி.

பிரகாமியம்:
வேண்டிய உடலை  எடுத்து  நினைத்த வரிடத்தில்  அப்போதே தோன்றுதல்.
அவ்வையார் இளவயதிலேயே  முதுமை வடிவத்தைப் பெற்றதும்,  காரைக்கால் அம்மையார்  தன்னுடைய அழகான பெண்வடிவத்தை  மாற்றி பேய் வடிவம் பெற்றதும்  பிரகாமியம் என்னும் சித்தாகும்.

ஈசத்துவம்:
ஐந்து தொழில்களை நடத்துதல்.
திருஞானசம்பந்தர் பூம்பாவைக்கு உயிர் கொடுத்து எழுப்பியமை  ஈசத்துவம் எனும் சித்தாகும்.

வசித்துவம்:
ஏழுவகைத் தோற்றமாகிய தேவ, மானிட, நரக, மிருக,  பறப்பன, ஊர்வன,  மரம் முதலியவற்றைத்  தம்வசப் படுத்துதல்.
திருநாவுக்கரசர் தம்மைக்  கொல்வதற்காக வந்த யானையை  நிறுத்தியதும்,  ராமர்  ஆலமரத்திலிருந்து  ஒலி செய்துகொண்டிருந்த பறவைகளின்  ஓசையை நிறுத்தியதும்  வசித்துவம் எனும் சித்தாகும்.

No comments:

Post a Comment