Thursday, 8 October 2015

சென்னை டூ லண்டன் 40 நிமிடம்

சிம்ப்சன்  துரை என்னும் வெள்ளையர். இந்தியாவின் முதல்  ஷாப்பிங்   மாலான ஸ்பென்சர்  பிளாசாவை  அவர் தான்  கட்டினார். ஸ்பென்சர் பிளாசா, Higgin Bothams என அனைத்தும் இந்த சிம்ப்சன் துறையால் அன்று கட்டப்பட்டது  
அவர் இந்தியாவில்  இருந்து  இங்கிலாந்து  திரும்பி  போகும் பொழுது  ஸ்பென்சர்  பிளாசா  முதலான  தனக்கு  இருக்கும் அணைத்து சொத்துக்களையும்  அனந்த கிருஷ்ணன் என்னும் தமிழருக்கு  விற்று விட்டார்.
சிம்ப்சன் கம்பெனியே பின்னர் Amalgamation  குரூப் ஆனது.
Amalgation குடும்பம், TVS குடும்பம்  இரு குடும்பமும் இன்று சம்மந்திகள்.
சிம்ப்சன் துரைக்கு சனாதன தர்மத்தின் மீது அசைக்க முடியாத  நம்பிக்கை இருந்தது. அவர் வெள்ளையராக  இருந்தும். ஒரு ஹிந்துவாக  தான் வாழ்ந்தார்.
சாங்கு சித்தர்   என்கிற மிகப்பெரிய சித்தர். அவர்  அவதாரம்  செய்தது சென்னை பரங்கி  மலையில் தான்.
அவருக்கு ஞானம் கொடுக்க கூடிய குரு  யாருமே கிடைக்கவில்லை.  காரணம்.
சாங்கு சித்தர் பிறவி ஞானி. அவருக்கு  ஞானம் கொடுக்க கூடிய  அளவு   தகுதியான  குரு  யாரும்  அமையவில்லை. அதனால். 63 நாயன்மார்களில் ஒருவரான  திருஞான  சம்பந்தரோடு  அவர் பேசினார்.
இன்றும் எவ்ளவோ சாமானிய மக்கள்  தீவிர பக்தியால் ராவேந்திரர், ஷீரடி பாபா போன்ற மகான்களின்  தரிசனங்களை பெற்று கொண்டிருக்கும் பொழுது. பிறவி ஞானியான  சாங்கு சித்தர் திரு ஞான  சம்பந்தரின் தரிசனத்தை  பெற்றதில்  என்ன? ஆச்சர்யம் இருக்கு.
சாங்கு சித்தர் திருஞான சம்பந்தரை துதித்தார். 
உடனே திரு ஞான சம்பந்தர்  சாங்கு சித்தர்  முன் தோன்றினார். உனக்கு என்ன? வரம் வேண்டும்  என்று கேட்டார்.
சாங்கு சித்தர் மிக பவ்யமாக தாங்கள்  எனக்கு குருவாக இருந்து  அணைத்து வித்தைகளையும்  உபதேசிக்க  வேண்டும்  என்றார்.
திருஞான சம்பந்தர்  புன்முறுவல்  பூத்தவாறே  சாங்கு சித்தருக்கு  பல கலைகளை, வித்தைகளை கற்று கொடுத்தார். மேலும்.
அது மட்டும் அல்ல. நீங்க கராத்தே கிளாஸ் போறீங்க, பாரத நாட்டிய கிளாஸ் போறீங்க. முதலில் பேசிக் லெவலை   ஆசிரியருக்கு  கீழ்  இருக்கும் யாரவது  ஒருவர் உங்களுக்கு  கற்று கொடுப்பார். அதன்  பிறகு அடுத்த ஸ்டெப்ஸை மெயின்  மாஸ்டர் கற்று கொடுப்பார்.
ஆனால் சாங்கு சித்தருக்கு அவ்வாறு  இல்லை.
முதலில் திரு ஞான சம்பந்தர்  சாங்கு சித்தருக்கு பலவிஷயங்களை  கற்று கொடுத்து அதன் பிறகு. எனது  சீடன்  கண்ணுடைய பிள்ளை  உனக்கு  மேற்கொண்டு பல விஷயங்களை  கற்று கொடுப்பான்  என்று திரு ஞான சம்பந்தர்  சொல்லி விட்டு மறைந்து விட்டார்.
அந்த கண்ணுடைய பிள்ளை அவர்கள் எழுதிய  ஒழிவிலொடுக்கம் 
மிக, மிக அற்புதமான   High  Phylosipcal   book.
கிரி டிரேடிங் முதலான பிரபலமான  கடைகள் அனைத்திலும்  ஒழிவிலொடுக்கம்  என்கிற இந்த  பொக்கிஷம்  எளிய  தமிழ்  விளக்கத்தோடு கிடைக்கிறது.
அதை வாங்கி படித்து பயன் பெறுங்கள்.
பிறவியிலேயே ஞானியாக பிறந்த  சாங்கு சித்தரின் அறிவுக்கு  தீனி  போடும்  அளவு குரு யாரும்  கிடைக்காமல். இவர் திரு ஞான  சம்பந்த  பெருமானை தியானித்து. அவர் சாங்கு சித்தர்  முன் உடனே தோன்றி. திருஞான  சம்பந்தர்  பல விஷயங்களை சாங்கு சித்தருக்கு கற்றும் கொடுத்து  இருக்கிறார் என்றால். அப்பொழுது  சாங்கு சித்தர் எவ்வளவு  பெரிய......  ஒரு ஞானியாக  இருக்க வேண்டும்.
சற்றே சிந்தித்து பாருங்கள்.
சரி. சாங்கு சித்தர் பற்றிய இந்த பதிவில்  எதற்கு? சிம்சங் துறை  பற்றி  பேசினேன் என்று யோசிக்கிறீர்களா?
அந்த சிம்சங் துரை சாங்கு சித்தரின்  பக்தர்.
ஒருநாள் அந்த சிம்சங் துறைக்கு  அவரின்  மனைவியிடம் இருந்து  லெட்டர் வந்தது.
அந்த லெட்டரில் ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட செய்தி இரண்டும்  இருந்தது.
நல்ல செய்தி அவரின் மனைவி கர்ப்பமாக  இருப்பது. கெட்ட செய்தி.
சிம்சங்கின் மனைவி உடல் ரொம்ப... கவலை கிடைக்கிடமாக  இருந்தது.
தாய், சேய் இரு உயிரில் ஏதேனும்  ஒரு  உயிரை தான் காப்பாற்ற முடியும். அல்லது இருவர் உயிரையும்  காப்பாற்ற முடியாது  என்று  சொல்லி டாக்டர்கள் அனைவரும்  கைவிரித்து விட்டார்கள்.
என் உயிர் போனாலும் பரவாயில்லை. நாளை நம் குடும்பத்துக்கு  என்று ஒரு வாரிசு  வேண்டும்  என்று நீங்கள்  இறைவனை வேண்டி கொள்ளுங்கள். நீங்கள் அடிக்கடி கடிதத்தில்  சாங்கு சித்தர் என்று  ஒரு பெரிய மகானை குறிப்பிடுவீர்களே. அந்த மகானை வேண்டி கொள்ளுங்கள் என்று சிம்சங்கின் மனைவி கடிதத்தில் எழுதி இருந்தாள்.
அவள் எழுதிய கடிதத்தை சிம்சங் படிக்கும் பொழுது சிம்சங் அருகே  சாங்கு சித்தர் அமர்ந்து இருந்தார்.
சாங்கு சித்தருக்கு எதுவுமே தெரியாததை போல் சிம்சங் தனது மனைவியின் கடிதத்தை  பற்றி கவலையோடு  அவரிடம் சொன்னார்.
சாங்கு சித்தர் உடனே சிம்சங்கை பார்த்து. நீ முதலில் உன் மனைவிக்கு பதில் கடிதம் எழுது  என்றார். உடனே சிம்சங் எழுதினார். அவர் எழுதிய பின்  சாங்கு சித்தர் அந்த கடிதத்தை சிம்சங் துறையிடம்  இருந்து பெற்று கொண்டார். நான் இந்த அறைக்குள்  செல்கிறேன். நீ வெளியே  தாழ்பாள் போடு. நான் கதவை  தட்டினால்  மட்டுமே  நீ திறக்க வேண்டும் என்று அவர் சொல்ல. அதன் படி சிம்சங் துறையும்  செய்தார்.
சுமார் 40 நிமிடங்களில் அவர் கதவை  தட்ட  சிம்சங் துறை கதவை  திறந்தால்.
சாங்கு சித்தர்  கையிலே  ஒரு கடிதம். அதை அவர் சிம்சங் துறை கையில் கொடுத்தார். சிம்சங் துறை ஒன்றும்  புரியாமல் விழித்தார்.
சாங்கு சித்தர் படிடா என்று சிம்சங்கை அதட்ட. சிம்சங் பயந்து நடுங்கியவாறே  கடிதத்தை  பார்த்தால் அந்த கடிதத்தில் இருப்பது அவர் மனைவியின் கையெழுத்து.
என்ன? ஒரு ஆச்சர்யம்.
40 நிமிடங்களில் சென்னை  ஆலந்தூரில்  இருந்து லண்டன்  சென்று. சிம்சங்கின்  மனைவியை கண்டு. சிம்சங் கொடுத்த பதில் கடிதத்தை கொடுத்து. சிம்சங்கின்  மனைவி உடனே பதிலுக்கு  எழுதி கொடுத்த அந்த கடிதத்தை பெற்று. இத்தனையும் வெறும்  40 நிமிடங்களில் நடந்தது.
சிம்சங்கின் மனைவி அந்த கடிதத்தில் என்ன? எழுதி இருந்தாள் தெரியுமா?
சாங்கு சித்தரின் தலையில் இருக்கும்  தலைப்பாகை முதலான அவரின் உருவ அமைப்பு. அவர் விபூதி பிரசாதம் கொடுத்து. உனக்கும், உன் குழந்தைக்கும் ஒன்றும் ஆகாது. எனது அருள் துணையாக  இருக்கிறது  என்று அவர்  ஆசிர்வதித்தது. முதலான  விஷயங்கள் அந்த கடிதத்தில்  எழுதப்பட்டு  இருந்தது.
அதன் பிறகு சிம்சங்கின்  மனைவிக்கு நல்லபடியாக பிரசவம் நடந்தது. அவளும், அவளின்  குழந்தையும் நலமாக இருந்தார்கள் என்பதை சொல்லவும்  வேண்டுமோ?
அத்தகைய இந்த சாங்கு சித்தரின்  118 வது ஆண்டு குரு பூஜை நாளை  காலை  9 மணியில் இருந்து  ஆரம்பம்.
118 ஆண்டுகள் பழமையான சாங்கு சித்தரின் ஜீவசமாதி கிண்டி  MKN ரோட்டில் அருணா  லாட்ஜூக்கு  அருகே உள்ளது.

No comments:

Post a Comment