Monday, 16 May 2016

மீஞ்சூரில்

1. செம்புலிபுரம் செங்காளியம்மன் கோவில்

2. பஞ்சேஷ்டி
அகத்தீஸ்வரர் - ஆனந்தவல்லி
வரலாறு  - சுகேது என்ற அரக்கன் கடலில் ஒளிந்துகொண்டான்.
சிவ பெருமான் அகத்தியரிடம் நீ சென்று இந்த செயலை முடித்து வா என அனுப்புகிறார்.
அகத்தியர் அக்கடலை குடித்து விடுகிறார். கடலில் உள்ள நீருடன் சுகேதுவும் அவர் வயிற்றினுள் சென்று விடுகிறான் .
அகத்தியர் சிறிது நீரை உமிழ்ந்த நீரை "அகத்தியர் உமிழ் நீர் தீர்த்தம்" என்கின்றனர் .
இங்கு வீற்றிருக்கும் அம்மன் முக்கண் உடையவர். அவரின் இடக்கால் முன்னோக்கி இருக்கும்...
இது தீயவைகளை அழிக்கும் கோலத்தில்  வீற்றிருக்கிறார்.
காஞ்சி அரசர்க்கு தரிசனம் தந்தார்.
அகத்தியரின் சீடர் புலத்தீஸ்வரர் அஷ்டலிங்கம் பிரதிஷ்டை செய்தார்.
நவக்கிரகம், அஷ்ட திக் பாலகர்கள் இன்னும் பல்வேறு மூர்த்திகளின் சிலைகள் அழகிய வேலைப்பாடுடன் நிறைந்து உள்ளது .ஆண்டுக்கு ஒருமுறை அகத்தியரே நேரில் இங்கு வந்து தரிசித்து செல்வதாக ஐதீகம்.

3. ஆண்டாள் குப்பம்
பழைய பெயர் : சுப்பரமணியபுரம்
முருகன் பிரம்மனிடம் ஓம் என்ற பிரணவ மந்திரத்தின் பொருள் கேட்கிறார்.
பிரம்மபிரான் சொல்லாமல் போகவே அவரை சிறை வைத்தார் .
பின் சிவபெருமான் கேட்டு கொண்டதிற்கிணங்க பிரம்மபிரான் தலையில் குட்டி விடுவித்தார்.

4.பொன்னேரி
மற்றொரு பெயர் : மங்களபுரம் , கும்பமுனிமங்கலம்
சிவபெருமான் தவத்தில் இருக்கும் போது பார்வதி தேவி பனித்துளி தூவி விளையாடுகிறார்.
தவம் களைந்த சிவபெருமான் பார்வதியை சபித்து விடுகிறார்.
பார்வதியை நாரதர் சந்தித்து வில்வவனம் சென்று தாமரை இலையில் அன்னம் படைத்து பதினோரு அமாவாசை தோறும் படைத்து வருமாறு கூறுகிறார்.
பார்வதி தேவியும் அவ்வாறு செய்யவே சிவபெருமான் அங்குள்ள ஆற்றில் தோன்றி பார்வதி தேவியை கயிலாயம் அழைத்து செல்கிறார்.
பொன் ஏர் கொண்டு அகத்தியர் இந்த ஊரை உழுது செழிப்பாகினார் .
இக்கோவிலில் பொன் ஏர் சின்னம் பொறித்து இருக்கிறார்கள்.
இக்கோவில் சோழர்கள் கட்டியதால் கஜ பிருஷ்டம் ( யானையின் பின்புறம் ) போல அமைந்திருக்கும்.

5.திருஆயற்பாடி
ஆரண்ய நதி
கரிகிருஷ்ணபெருமாள் கோவில் - ஆறு அதிசயங்கள்
ஆயற்பாடி மக்கள் அதிகம் வாழும் ஊர் . இந்த ஊர் சிறுவர்கள் விளையாடி கொண்டு இருந்த போது ஏதோ தட்டுப்பட பெரியவர்கள் வந்து  மண்ணால் ஆன ஒரு சுயம்பு கிருஷ்ண வடிவம் கண்டனர் . அவரின் கைகளில் மாடு ஓட்டும் குச்சி வைத்து இருப்பார். உருவம் சாய்ந்து இருக்கும்.
மண்டபமும் சாய்ந்த தூண் கொண்டு இருக்கும்.
இக்கோவில் கரிகால சோழன் கட்டியதால் கரி என்ற சொல் முன்னிற்கிறது.
குளம், ஆறு என் இரு நீர்நிலைகள் உள்ளது
தாயார் இடப்பக்கம் இருக்கிறார்.
இரண்டு கொடிமரம் இருக்கிறது. ஒன்று கிருஷ்ண பகவானுக்கு மற்றோன்று ராமருக்கு.
கிருஷ்ணர் இரு கைகள் உடையவராய் காட்சி தருகிறார் .

6.மீஞ்சூர் 
வரதராஜ பெருமாள் - பெருந்தேவி அம்மையார்
ஸ்ரீதேவி பூதேவி இருவரும் பெருமாளின் பக்கத்தில் காட்சி தருவார்கள்.
காஞ்சியின் கோவில்களில் கிடைக்கும் புண்ணியம் இங்கு வந்து தரிசனம் செய்தாலும் கிடைக்கும்.
கிழக்கு பார்த்த கோவில்.

7.ஏகாம்பரேஸ்வரர் - வடகாஞ்சி - மீஞ்சூர்
காசி விஸ்வநாதர் - விசாலாட்சி
இஸ்தல விருட்சம் மாமரம்.
வன்னி மரம் கீழ் நாகராஜன்.
அத்திமரம் 

8.தேவதானம் - வட ஸ்ரீரங்கம் 
ரங்கநாயகி
பெருமாள் ஆமையாக உருக்கொண்டு, அமிர்தம் பெற பாற்கடலில் வாசுகி பாம்பை கொண்டு, மேருமலையை மத்தாக கொண்டு கடைந்து தேவர்களுக்கு
அரக்கர்களிடம் அமிர்தம் பெற உதவியதால் தேவர்கள் பெருமாளுக்கு தானமாக கொடுத்த ஊர்.
இக்கோவிலில் உள்ள சிலைகள் சாலிகிராம கற்களால் சாலிகிராம ராஜாக்களால் கட்டபெற்றது.
ஸ்ரீரங்கம் பெருமாளை விட 11/2 அடி பெரிய பெருமாள் ( சிலையின் மொத்த உயரம் 51/2 அடி)
உலகுக்கு படி அளந்து விட்டு மரக்காலின் மேல் படுத்து இருக்கிறார் .
செண்பக மரம்
பலா மரம்
அரசமரம்

9.நெய்தவாயில் - வெண்லிங்கம்
அக்னீஸ்வரர் - திருபுரசுந்தரி
சோழராஜா வரும் வழியில் புதரில் சூர்ய ஒளி பட்டு அங்கிருந்த வெண்லிங்கம் ஒளிவிட்டு கொண்டிருந்தது.
அதனை கண்ட ராஜா அங்கு ஒரு கோவில் எழுப்பினார் .

10.திருவள்ளைவாயில்
திருவள்ளீஸ்வரர் - சாந்தநாயகி
மகிழ மரம்
மேற்கு பார்த்த கோவில் - கோபுர  நிழல் கீழே விழாது ( தஞ்சாவூர் மாதிரி அமைப்பு கொண்ட கோபுரம் )

11.வட ராமேஸ்வரம்
ஊர் : கோயிலடி
சிந்தாமணீஸ்வரர் - சிவகாமி 
பஞ்ச பிரம்ம ஷேத்ரங்களில்  ஒன்று 
காட்டூர் , பழவேற்காடு - கடற்கரை அருகில்
படகில் சென்றால் குறைவான நேரத்தில் செல்லலாம் .
பறவைகள் சரணாலயம்.
Dutch cemetery
பஞ்ச பிரம்ம ஷேத்ரம் - ஒரே நேர்க்கோடு  - அகத்திய ஆஸ்ரமம் - சுருட்டபள்ளி - பெரிய பாளையம்

12. திருவாலீஸ்வரர்  - திரிபுரசுந்தரி
பூந்தோட்டம்
இராவணன் பிரம்மனின் பேரன்.
இராவணனுக்கும் வாலிக்கும் போர் நிகழும் முன் வாலி இங்கு வந்து வழிபட்டார்.
இக்கோவில் சோழர்கள் கட்டியதால் கஜ பிருஷ்டம் ( யானையின் பின்புறம் ) போல அமைந்திருக்கும்.

13.வைகுந்த பெருமாள்
சிவன் பெருமாள் நேரே சந்தித்தல்

14.திருபாலைவனம்
திருபாலீஸ்வரர் - அமிர்தேஸ்வரர் - லோகம்பிகை (வலப்பக்கம் )
பாலை மரங்கள் நிறைந்த காடு
தேவர்கள் அமிர்தம் உட்கொள்ள இங்கு வந்தனர் . முதலில் கொஞ்சம்
அமிர்தத்தை கொஞ்சம் எடுத்து வைத்து இறைவனை வழிபட்டு உட்கொண்டனர் .
பின் அங்குள்ள குளத்தில் கை அலம்பினர்.
அந்நீரை குடிக்கும் பொருட்டு அரக்கர்கள் தவளை உருக்கொண்டு அங்கு வந்தனர்.
அக்குளத்தில் தவளைகள் வாழ கூடாது என ஒரு சாபம் ஏற்பட்டு அரக்கர்கள் அமிர்தம் உண்ண தடை ஏற்பட்டது.
இக்கோவில் சோழர்கள் கட்டியதால் கஜ பிருஷ்டம் ( யானையின் பின்புறம் ) போல அமைந்திருக்கும்.
பிற்காலத்தில் அந்த சோலையில் சோழ மன்னன் தனது பரிவாரத்துடன் வந்து தங்கிய நேரத்தில் பாலை மரத்தில் கட்டி வெய்த்திருந்த யானை, குதிரை போன்ற பிராணிகள் மயக்கமடைந்து விட்டன. அதனால் கோபம் கொண்டு காரணம் அறிய சோழ ராஜா அம்மரங்களை வெட்ட சொல்கிறார். மரங்களை வெட்டியதும் அதிலிருந்து இரத்தம் வந்ததை கண்ட அரசன் அதிர்ச்சி அடைகிறார். ஒரு அசரீரி அங்கு கோவில் கட்டுமாறு பணிக்கிறது. இருபது வருடம் அங்கே தங்கி இருந்து கோவில் கட்டி கொடுத்தார். கதவிற் கணபதி ( கோவில் கதவில் இருந்த சிறிய கணபதி )
வெட்டுப்பட்ட தடம் லிங்கத்தின் மேல் இன்றும் இருக்கிறது .
தீர்த்தம் - அமிர்தபுஷ்கரணி 

15. சதுர்வேதிபுரம்
இரண்டு மூலவர்கள்
அஷ்டதீஸ்வரர் - அஷ்டம்பிகை 
சதுர்வேதிஸ்வரர்
அகத்தியர் அங்கு 108 மண்ணால் ஆன தினமும் ஒரு சிவலிங்கம் என  108 லிங்கங்களை செய்தார் .
ஆனால் விநாயகரை வழிபடாமல் இக்காரியத்தை ஆரம்பித்ததால் 108 வது நாள்  அனைத்து சிவலிங்கங்களும் விநாயகராய் உருக்கொண்டு விட்டது 
இவ்வாறு வழிபட்டால் காசிக்கு சென்ற புண்ணியம் கிடைக்கும் என சிவபெருமானே அகத்தியருக்கு அருளினார் 

ஏறு அழிஞ்சல் மரம்
2500 ஆண்டுகள் பழமையான மரம் 
இம்மரத்தின் பழத்தில் உள்ள விதைகள் கீழே விழுந்த பிறகு அதில் சில விதைகள் தானாகவே மரத்தின் கிளைகளில் ஒட்டிக்கொள்ளும்.
இவ்விதைகளை வேறு எங்கு சென்று போட்டாலும் முளைக்கவில்லை .

16.புழல் -
கணவன் மனைவி
கணவன் வேலைக்கு சென்று  வீட்டிற்கு வந்ததும் கணக்கு வழக்குகளை மனைவியிடம் காட்டுவது.

No comments:

Post a Comment