ஒரு மகானின் அவதாரம் என்பது இறைவனின் வழிகாட்டுதலுக்கும் தீர்மானத்துக்கும் உட்பட்டே அரங்கேறுகிறது. அப்படி இறைவனால் தீர்மானிக்கப்பட்டு பூமியில் தோன்றிய போற்றத்தக்க ஓர் அவதாரம் தான் தவத்திரு.அப்பா பைத்தியம் சாமிகள்..
சுவாமிகளின் இயற்பெயர் முத்து. ஜமீன் பரம்பரையில் பிறந்தவர். 1859-ம் வருடம் சித்திரைத் திங்கள் 28-ம் நாள் புனர்பூச நட்சத்திரத்தில் கரூவூர் ஜமீன் குடும்பத்து வாரிசாக அவதரித்தார் .எட்டு மாத குழந்தையான சுவாமிகளை கண்டுணர்ந்த பசிக்கு ஒதுங்கிய பரதேசி ஒருவர் “இது தெய்வக்குழந்தை” என்று அருள்வாக்கு சொல்லி மறைந்தார்.. சுவாமிகளின் எட்டாவது மாதத்தில் தன் தாயையும்,பதினாறாம் வயதில் தந்தையையும் இழந்தார். தன் தந்தையை இழந்தவுடன் தான் தனிமையாகி விட்டதாக உணர்ந்தார். யாரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டு கிளம்பி பழனி செல்லும் வண்டியை பிடித்து பழனி மலையை அடைந்தார். பழனியில் விநாயகர் கோயிலில் அமர்ந்து கொண்டு அழுதார். அப்போது ஆடையில்லாமல், பிச்சைக்காரர் போன்று அழுக்கான தோற்றமளித்த ஒருவர் வந்து நீ யார் ? ஏன் தனியாக அமர்ந்து அழுது கொண்டிருக்கிறாய் ? உன் தாய்-தந்தையர் எங்கே ? என்று வினவினார். அவர் தான் தவத்திரு ஸ்ரீ அழுக்கு சுவாமிகள்..என்னுடன் வா என்று சொல்லி சுவாமிகளை மூன்று நாட்கள் காடு,மலை என்று எங்கெல்லாமோ அழைத்துச் சென்றார். கடைசியில் ஒரு குகைக்கு வந்தடைந்து அதனுள்ளிருந்து ஒரு ஏட்டுச் சுவடியை கொண்டு வந்து கொடுத்து சுவாமிகளை படிக்கச் சொன்னார்.நீ ஆண்டவன் குழந்தை -உன் முன்னோர்கள் செய்த புண்ணியத்தால் நீ நாட்டுக்கு நல்லது செய்ய வந்து பிறந்துள்ளாய்”என்று சொல்லி சுவாமிகளின் பிறப்பின் இரகசியத்தை அறிவித்து சில நாட்களில் சமாதியானார்.
தனக்கு இருந்த ஒரே ஒரு ஆதரவும் மறைந்த பின் சுவாமிகள் அங்கிருந்து புறப்பட்டு கன்னியாகுமரி சென்றார். காடு மலைகளை சுற்றி திரிந்தார்.சுவாமிகள் ஊர் ஊராக சென்றார். மக்களின் குறைகளை தீர்த்து வைத்தார். தன்னை நாடி வந்தவர்களுக்கு இன்னருள் புரிந்தார். தன்னை மனதினில் இருத்தி தியானிப்பவர்களுக்கு கஷ்டங்களைப் போக்கி நல்லாசி வழங்கினார். பக்தர்கள் அவரை “அப்பா அப்பா” என்று தான் கூப்பிடுவார்கள். ஆனால் சுவாமிகள் தன்னை ஒரு பைத்தியம் என்று தான் சொல்லிக் கொள்வார்கள். அதனால் அவர் “அப்பா பைத்தியம் சுவாமிகள்” என்றே அழைக்கப்பட்டார்.
அழுக்கு சாமிகள் பொள்ளாச்சி வேட்டைக்காரன் புதூரில் ஜீவசமாதி அடைந்துள்ளார். சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு விழுப்புரம் பகுதியில் சுற்றி திரிந்த அப்பா பைத்தியசாமிகளை சில அன்பர்கள் புதுவைக்கு அழைத்து வந்தனர். 1995 வரை புதுவையில் தங்கியிருந்தார். அதன் பின் புதுவையில் இருந்து சாமிகள் பிற ஊர்களுக்கு சென்றார். சுவாமிகள் நிறைவாக தமது 141-ஆம் வயதில் சேலத்தில் உள்ள சூரமங்கலம் என்ற ஊரில் “சற்குரு மாளிகை” எனுமிடத்தில் பிரமாதி ஆண்டு 11.02.2000 தை அன்று 28-ம் நாள் அசுவினி நட்சத்திரத்தில் சமாதியானார்.
No comments:
Post a Comment