Wednesday, 24 February 2016

சனிக்கிரக தோஷம் நீக்கும் ஸ்ரீசத்குரு சம்ஹாரமூர்த்தி சுவாமிகள் 

திருச்செந்தூர் கடற்கரையில் சூரசமஹாரம் நடக்கும் இடத்தில் முருகனின் ஜெயந்தி மண்டபத்திற்கு அருகில் சுமார் பத்திற்கும் மேல் சித்தர் சமாதிகள் உள்ளன. அவற்றில் கடைசியாக தென்னை மரங்கள் சூழ்ந்த சோலையின் நடுவில் அமர்ந்து அருள்பாலித்துக் கொண்டிருந்தவர் தான் ஸ்ரீசத்குரு சம்ஹாரமூர்த்தி சுவாமிகள்.

அவரை வணங்கினால் ஏவல், பில்லி சூனியம், எதிர்ப்பு, கோர்ட், கேஸ் வழக்குகள் மற்றும் சனிக் கிரஹத்தின் கொடிய தோஷங்களும் விலகி விடும் 

மாமியார் கொடுமைக்கு ஆளான மருமகள் எத்தனையோ பேர்கள் சுவாமியை வணங்கி நல்ல வாழ்க்கை அமையப்பெற்றார்கள். கோர்ட் கேஸ் விவகாரங்களில் உயிர் ஆபத்துக்களில் இருந்தும் நிவாரணம் பெற்றிருக்கிறார்கள். அப்படிப்பட்ட சுவாமியின் அருளையும் கருணையையும் பெற்று மற்றவர்களுக்கும் கூறி உதவுங்கள்.


Tuesday, 23 February 2016

சுந்தரமகாலிங்க மலை

சித்தர் தேசமான சதுரகிரி, சுந்தரமகாலிங்க மலையை பற்றி சில தகவல்களை மற்றொரு இழையில் பகிர்ந்துள்ளோம். சித்தர்களை பற்றிய எனது ஆர்வத்தால் சேகரித்த சில தகவல்களை தொடர்ச்சியாக பதிக்கிறேன். தமிழக்கத்தை சுற்றிலும் மலைகளிலும்,குகைகளிலும் வாழ்ந்து சிலர் பற்றிய குறிப்புகள் இலக்கியங்களிலும் மேலும் பலர் பற்றிய குறிப்புகள் செவி வழியாக பிரதேச மக்களிடையே காணப் பெறலாம். சதுர கிரியை சுற்றி உள்ள மக்களிடம் சேகரித்த விசயங்களை , சித்தர் நூல்கள் கண்டு சேகரித்த விசயங்களை காலம் கிடைக்கும் போது பதிகிறேன்
சித்தர்கள் என மக்களால் நம்பப் படுபவர்கள் முறையே
அகத்தியர்
போகர்
காக புஜண்டர்
உரோம முனி சித்தர்
வல்லப சித்தர்
யாக்கோபு சித்தர்
கோரக்கர்
மச்ச முனி
கருவூரார்
பின்னாகீசர்
சிவ வாகியர்
காலாங்கி நாதர்
நந்தீசர்
கொங்கணர்
சட்டை முநி
பிராந்தர்
அகப்பேய் சித்தர்
தேரையர்
பாப்பாட்டி சித்தர்
குதம்பை சித்தர்
புலிப்பாணி சித்தர்
அழுகினி சித்தர்
கல்லுளி சித்தர்
கமல முனி
திருமூலர்
சிவளிங்கேச்வர சித்தர்
பசுமடத்துக் கோனார் சித்தர்
புலத்தியர்
போடோ சித்தர்
சட முடி தம்பிரான் சித்தர்
வேப்பிலை கட்டி சித்தர்
கொள்ளார் கோபுரம் காத்தான் சித்தர்
பதஞ்சலி
பல்குனி ருத்ர சித்தர்
பொன் முதிரையர்
நாடன் கோபால நாயகன்
பட்டினத்தார்
சப்த கந்தலிங்க சித்தர்
கடுவெளி சிதார்
சித்தர் சாங்க தேவர்
மகானு பாவலு சித்தர்
மலைப் பீடான் சித்தர்
பெருமானத சீதா சுமாகிகள்
தாயுமானவர்
முது வடுக நாத சித்தர்
சதா சிவ பிரமேந்திரர்
சிலம்பாகினி சித்தர்
பேத நாராயண சித்தர்
இடியாப்பா சித்தர்
சிவபெருவால சித்தர்
பாம்பனியாயான் சித்தர்
காண தனனான் சித்தர்
பாக்கர்
இடைக்காடர்
அருநாசால சுவாமி
இவர்களை பற்றி தெரிந்த கருத்துகளை பகிர்வோம்.
சதுரகிரி மலை சிறு வயது முதல் பரிட்சயமானதால் துல்லியமான அங்கு உள்ள சித்தர்கள் குகைக்களை,அவர்களா பற்றிய தகவல்கள கொடுக்க முடியும் இன்ன பிற சித்தர்கள் செவி வழி நூல் வழி அறிந்த செய்திகளை படி படியாக பதிகிறேன்.
வத்திராயிருப்பில் இருந்து சதுரகிரி மலையின் அடிவாரமான தானிப்பாரையின் ஆரம்பித்து பதினான் மைல்கல் மலைப் பாதையில் ஏறினால் சுந்தர மகாலிங்கம் ஏழு மலை சூழ தரிசிக்கலாம். அதன் வழியில் உள்ள சித்தர் உறைந்த குகைகளை,இன்று சித்தர்கள் சில சாமியார்கள் வாழும் ஆசிரமங்களை காணாலாம் .
தானிபாரையில் மலை ஏறியவுடன் அத்திரிமகரிஷி ஆசிரமம் ,சதுரகிரி செல்லும் வழியில் கயிலாசகிரி பகுதியில் மச்ச முனிவர் ஆசிரமம் , சந்திரகிரி வன பகுதியில் கொரக்க முனிவர் ஆசிரமம் , விஷ்ணு கிரி பகுதியில் ராமதேவர் ஆசிரமம், மற்றும் மேருகிரி பாதையில் துர்வாச ரிஷி ஆசிரமம் .
சுந்தர மகாலிங்கம் கோயிலின் வடக்கே சந்தன மகாலிங்கார் கோயில் உள்ளது.
இங்கு பார்வதி தீர்த்தம் மிக பிரசித்தம். அக்காலத்தில் பார்வதி நீராடி சிவனை
பூஜித்தாதாக கருதப்படும் வற்றா சுனை. இங்கு சட்டை முனிவர் குகை உள்ளது
சதுரகிரியின் வடக்கே மகேந்திரகிரி மலை உள்ளது இங்கு போக மரிஷி ஆசிரமம் , கும்ப மலையில் கும்ப முனிவர் குகையும் உள்ளது .
மழையின் வடக்கே மற்றொரு குன்றான சஞ்சீவி கிரியில் புசுண்டர் மகரிஷி ஆசிரமும் , இந்திரகிரி மலையில் உரோமகிரி ஆசிரமும், யூகி முனிவர் ஆசிரம்
மேற்பக்கம் கயிலாசகிரி மழையில் சுந்தரானார் ஆசிரமும்,அழகானந்தா ஆசிரமும் இருந்ததாக கூறுவார் .இங்கு உள்ள குகைகளில் சித்தர்கள் வாழ்ந்ததாகவும் , ஆசிரமங்கள் இருந்ததாகவும் மலை வாழ மக்கள் , ஊர் மக்கள் சொல்வார்..சிலனவர்றிற்கு சென்று உள்ளேன்.
கோயிலுக்கு தென் பக்கம் உள்ள சன்னாசி வனம் மிக பிரபலம். சதுரகிரி என்ற பெயர் சுற்றிலும் ஏழு குன்றுகள் வெவேறு பெயர்களில் சூழ அமைந்து இருப்பதால் வந்தது. இது போக இன்னும் பத்துக்கும் மேற்ப்பட்ட வனங்கள், குகைகள் உள்ளன ..
தமிழாக அரசால் அறிவிக்கப்பட்ட "பாதுகாக்கப்பட்ட மூலிகை வனம் " இந்த சதுரகிரி மலை
சிறுத்தைகள்,காட்டு பன்றி, காட்டு எருமைகள் , கரடி, கோடை காலங்களில் யானைகள் கூட்டத்தை காணலாம். தேனி ,கம்பம் வழியாக குறுக்கு பாதையில் இந்த மழையை அடையலாம். இதன் அருகே கொவிலாறு அணையும், பிளவக்கள் அணையும் மிக பிரபலம் .
போகர் !!
சித்தர்களில் சிறந்த சித்தரான போகரை பற்றி சிலனவ்றை சித்தர் பாடல்கள்,பெரிய நாகை கோவை, காண மஞ்சரி தொகுப்புகள் இருந்து குறிபெடுத்து கொடுத்துள்ளேன்
அகஸ்தியர் பன்னிரெண்டாயிரம் நூலில் போகரை பற்றி
"சிந்தான சித்து முனி போகநாதன்
சிறந்த பதிநேன்ன் பேரில் உயர்ந்த சீலன்
கத்த னென்னும் காலங்கி நாதர் சீடன்
கனமான சீன பத்திக் குகந்த பாலன்
குத்தான் அதிசியங்கள் யாவர்ருந்தான்
மூதுலகில் கண்டறிந்த முதல்வன் சித்தன் "
இவர் சீன தேசத்தை சார்ந்தவர் என்றும் சீனாவில் துணி வெளுக்கும் மரபினர் வழியில் வந்தவர் என கூறப்படுகிறது
இன்னொரு குறிப்பு இவர் தமிழ் நாட்டை சார்ந்தவர் என்றும் பின் சீன சென்று அங்கு பல காலம் தங்கி சீன நூல்களை இயற்றி மீண்டும் தமிழ்நாட்டுக்கு திரும்ப வந்து பழாணி மலையில் நவபாஷன முறையில் சிலையை தயாரித்தவர் இவர் எனவும் கூறப்படுகிறது
"போகர் சத காண்டம் "என்னும் நூலில் இவருக்கு சீனாவில் போ -யான் என்றும் வா-ஒ-ஸியூ என்ற பெயரில் தலை சிறந்த ந்ஜானியாக வாழந்தாராகவும் குறிக்கப் பட்டுள்ளது.
போகர் தம் சீடர்கள் 63 பேருக்கு அஷ்டாங்க யோகங்களை கற்பித்து அதனை பரிட்சித்து பார்க்க சொன்னதாக உண்டு . இவர் என்றும் இளமையாக இருக்கும் காய கல்ப முறையை கற்று தேர்ந்தவர்.
இவர் மேரு மழையில் வாழ்ந்த காலங்கிநாதரின் சீடராகவும் இருந்தார் . இவர் இறந்தவரை உயிர்பிக்கும் சந்ஜீவனி மூலிகை முறையை தெரிந்து கொள்வதற்காக பலரிடம் சீடராக சேர்ந்து பல சாபங்களை வாங்கி கொண்டதாக தெரிகிறது.
பழனியில் ஒன்பது வித கூட்டு பொருளை வைத்து நவபாஷன முறையில் விக்கிரகம் வடித்தார் எனவும் திருசென்கோடு அர்த்த நாரீசவரை உருவாக்கிவரும் இவரே என சொலபடுவது உண்டு .
புலிப்பாணி சித்தர் இவரின் சீடர் ஆவர். போகரை அகத்தியரின் சிதார் என அபிதான சிந்தாமணி நூல் கூறுகிறது .
போகர் சமாதி பழனி ஆண்டவரின் ஆலயத்தின் உட்பிரகாரத்தில் தென் மேற்கு மூலையில் உள்ளது
போகர் இயற்றிய நூல்கள் முறையே
போகர் சப்த காண்டம், போகர் நிகண்டு,போகர்ஜன சாகரம்,போகர் கற்பம், போகர் இரண வாகடம்,போகர் முப்பு சூத்திரம், இநூல் பட்டியல் அகத்தியரின் சவ்மிய சாகரத்தில் உள்ளன
கோரக்கர்
"
சொல்லவே கோரக்கர் பிறந்த நேர்மை
சுந்தரனார் வசிஷ்ட மகரிச்கியாருக்கு
புல்லவே காணக் குற ஜாதியப்பா
புகழாகான கன்னியவள் பெற்ற பிள்ளை
வெல்லவே அனுலோமன் என்னலாகும்
வேதாந்த கோரக்கர் சித்து தாமும்
நல்லதொரு பிரகாசமான சித்து "
என போகர் 7000 நூலில் கோரக்கர் மகரிஷிக்கும், குறபென்னுக்கும் பிறந்ததாக வரலாறு கூறுகிறது.
மச்ச முனியின் சீடரான கோரக்கர் எழுதிய நூல் "கோரக்கர் வைப்பு" என அழைக்கப்படுகிறது. பெரும்பாலான சித்தர்கள் தாம் கண்ட வைத்திய முறையை எளிதில் புரிந்து கொள்ள இயலாத படி மறை பொருளாக பாடுவார். அனால் கோரக்கர் அனைவரும் புரிந்து கொள்ளும் படி எளிய நடையில் எழுதி வைத்ததாகவும் அது பிறர் கையில் கிடைத்தால் ஆபத்து என அவர் நூல்களை களவாட சித்தர்கள் த்ரண்டு வந்த பொது கண்ஜாவையும்,அரிசியையும் அரைத்து அடை சுட்ட கொடுத்து அவர்களை மயங்க வைத்து சில நூல்களை காப்பர்ரினர் என கதை உண்டு .
கஞ்சாவை காயகல்ப முறைகளில் ஒன்றாக பயன்படுத்தியவர்.இவர் கோரக்கர் சந்திர ரேகை,கோரக்கர் முத்தாரம்,கோரக்கர் கற்பம்,கோரக்கர் அட்டகர்மம்,கோரக்கர் தண்டகம் போன்றன
வரத நாடு என்னும் காட்டுக்கு சென்ற கோரக்கர் அங்கு பிரம்ம முனி எனும் சித்தரின் நட்பு கிடைக்கபெர்று இருவரும் சேர்ந்து பல சித்துக்கள் செய்தனர் என கூறுவார்.
புதுசெரியில் உள்ள கோர்க்காடு எனும் ஊரில் கோரக்கர் தவம் செய்த ஊர் என கூறி அங்கே அவர் சமாதி அடைந்ததால் ஆவூர் கோர்க்காடு என்ப்படுவதாக கூறுவார்
உரோம ரிஷி !
"கால் வட்டம் தங்கி மதி அமுதப் பாலைக்
கண்டு பசியாற்றி மண் சுவடு நீக்கி
ஞ்aல வட்டம் சித்தாடும் பெரியோர் பதம்
நம்பினதால் உரோமன் என்பேர் நாயன் தானே "
என உரோம ரிஷி ஞ்அனம் கூறுகிறது
உடலில் ரோமம் அதிகம் இருந்த காரணத்தால் உரோம முனி என பெயர் பெற்றிருக்கிறார். புசுண்ட மாமுனிவரின் சீடர்.
இவர் ஒரு முறை இறைவன் மேல் உள்ள கோபத்தால் நீராடாமல் கோயிலுக்கு செல்ல முற்படுகையில் இறைவன் சித்தியால் கோயிலுக்க் வெளியே தடுக்கப்பட்டு
"புறதூய்மையை விட அகத்தூய்மை இன்றியமையாதது" என உணர்தபடாராம் .
அக்காலத்தில் சித்தர்களாக,ரிஷிகளாக பலரும் காடுகளுக்கு சென்று ,செழித்து வளர்ந்த கிழங்குகளை தின்று ,நதிகளில் நீராடி இறுதியில் காமத் தீயில் அகப்பட்டு முத்தி பெறாமல்
மாண்டவர் பலரேனவும் அவர்களிடையே ஞ்aனம் பெற்று சித்து நிலையை அடைந்தவர் சிலறேனவும் உரோம ரிஷி ஞ்aனம் சொல்கிறது
"காடேரி மலையேறி நதிகளாடி
காய் கிழங்கு சருகு தின்று காமத் தீயால்
சூடேறி மாண்டவர்கள் கோடா கோடி
சொருப முத்தி பெற்றவர்கள் சுருக்க மாச்சே "
இவர் சிங்கி வைப்பு, உரோம ரிஷி வைத்திய சூத்திரம் ,வகார சூதிரம், உரோம ரிஷி முப்பு சூத்திரம் போற நூல்களை எழுதியுள்ளார்
அழுகணிச் சித்தர் !!
இவர் பாடல்கள் அனைத்தும் ஒப்பாரி போல அமைந்து இருப்பதால் அவருக்கு அழுகணி சித்தர் என பெயர் வந்திருக்கலாம் என கூறுவார்
அழுகணி சித்தர் பாடல்கள் முறையே
"பையுரிலேய்ருந்து பாழுரிலே பிறந்து
மெய்யூரில் போவதற்கு வேதாந்த விடறியேன்
மெய்யூரில் போவதற்கு வேதாந்த வீடறிந்தால்
பையூரும் மெய்யூர்ம் என் கண்ணம்மா
பாழாய் முடியாதோ "
இவர் பாடல்களில் இருக்கும் அழகையும் , அணியையும் காரணமாக் வைத்து அவருக்கு அழகணி சித்தர் என பெயர் வந்து அதுவே மருவி அழகுனி சித்தர் என மாரியதாக் கூறுவார்.
இவர் பாடல்கலில் அழுகன்னி ,தோழுகன்னி மூலிகைகளை மிகுதியாக கையாண்ட்துள்ளார்.
இவர் பெயரில் 32 கலிதாழிசைகள் உள்ளன . வாசியோகம் ,காய சித்தி முறை பற்றி இவர் பாடல்கள் விளக்குகின்றன
இவர் அழுகணி சித்தர் பாடல், ந்ஜான சூத்திரம் , அழுகன் யோகம், அழுகன் வைத்தியம் போன்ற நூல்களை படைத்துள்ளார்
இவர் நாகப்படினத்தில் உள்ள சிவ பெருமான் கோயில் வளாகத்தில் சமாதி அடைந்துள்ளார்
கல்லுளி சித்தர்
"பிரம்மா சொரூபத்தை நாடு - உன்
கர்ம வினையோட வழிதன்னை தேடு
எட்டி பழுத்தாலும் என்ன -காசு
ஈயாத லோபிகள் வாழ்ந்தாலும் என்ன ?
கட்டி வராகநிருன்தென்ன - அதைக்
காவல்கள் போட்டு நீ காத்திருன்தென்ன? "
கல்லுளி சித்தர் பாடல் இவ்வாறு விரிகிறது
இவரை கல்லடிச் சித்தர் எனவும் கூறுவார் . இவரின் ஞ்ஜானக் கருந்துக்களை ஏற்றுக் கொள்ளாத மக்கள் இவரை கல்லால் அடித்ததாக சொல்லுவர்.இவர் அக்காலத்தில் ஒரு சீர்திருத்தவாதியாக இரூந்திருக்கிறார்
ஒரு சீர்திருத்த நிகழ்வு !!
மிகுந்த தாகமாயிருந்த கல்லுளி சித்தர் சீடன் ஒருவன் ஒரு அந்தண பெண்மணி கொண்டு வந்த நீரை எடுத்து தாகத்தின் கொடுமையால் பருகி விட்டன். உடனே அந்த பெண் அந்த நீரை கொட்டிவிட்டு வேறு நீர் எடுக்க சென்றால் .
மேலும் அந்த பெண் " வேதம் ஓதும் அந்தணன் வாய் எச்சில் நீரை பருகக் கூடாது" என்பது வேத வாக்கு என்று கூறி சென்றால்
அதற்கு அந்த சீடன் " புனிதமான வேதம் ஒதுவிப்பவர்கள் அதன் புனிததாலேயே சிறப்பு பெறுகிறார்கள் அன்றி உண்ணும் உணவில் ,நீரில் அல்ல " என அந்த அந்தண பெண்மணியிடம் சொல்லி சென்று தன் குருவான கல்லுளி சித்தரிடம் முறை இடுகிறான்.
கல்லுளி சித்தர் அந்த சீடனுக்கு வேதம் சொல்லி கொடுத்து நாவினால் ஒதப்பட்டாலும்
" வேதம் மட்டும் புனிதமுடையது" என்று வேதியரின் கர்வத்தை அடக்கியதாக ஒரு கதை உண்டு.
மச்ச முனி
சித்தான சித்து முனி மச்சனப்பா
சீருலகில் நெடுங்கால மிகுந்த சித்து
சத்தான திறேகமத்தை நம்பா மாற்றான்
தாரனியிலிருந்த தொரு தனத்தை எல்லாம்
நித்திய முகமதி கட்கு அன்ன தந்து
பதினெண் சித்தர்களில் ஒருவரான மச்ச முனி பலரிடம் சிஷ்யராக் இருந்திருக்கிறார் .. இவர் காக புகண்டரிடம் உபதேசம் பெற்றதாகவும் ,போகரிடம் சித்துக்களை கற்றதாகவும் உண்டு .. நீர் வாழ உயிரினங்களுக்கு மச்ச முனி சத் குருவாக இருப்பார் என கதை உண்டு .
இவர் எழுதிய நூகள் முறையே மச்ச முனி கடை காண்டம் ,மச்ச முனி நகண்டு போன்றவை ..
இவர் திருபரங்குன்றத்தில் ச்மாதி அடைந்தாதாகவும் , திருவானைக்காவில் சித்தியடைந்ததாக கூறுவார்

வாரியார் சொன்ன கற்பூர கதை


பக்தன் ஒருவன் கோயிலுக்குச் சென்றான். அவனது கூடையில் ஆண்டவனுக்குச் சமர்ப்பிப்பதற்காக வாழைப்பழம், தேங்காய், கற்பூரம் ஆகியன இருந்தன.
தேங்காய் பேச ஆரம்பித்தது: ”நம் மூவரில் நானே கெட்டியானவன், பெரியவனும்கூட!” என்றது. அடுத்து வாழைப்பழம், ”நமது மூவரில் நானே இளமையானவன், இனிமையானவன்” என்று பெருமைப்பட்டுக் கொண்டது. கற்பூரமோ எதுவும் பேசாமல் மௌனம் காத்தது.
பக்தன் சந்நிதியை அடைந்தான். தேங்காய் உடைபட்டது. பழத்தோல் உரிக்கப்பட்டது. கற்பூரமோ தீபம் ஏற்றியதும் கரைந்து ஒன்றும் இல்லாமல் போனது. பக்தர்களாகிய நாம் இதிலிருந்து ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். நாம் தேங்காய் போல் கர்வத்துடன் இருந்தால், ஒருநாள் நிச்சயம் உடைபடுவோம்.
இனிமையாக இருந்தாலும், வாழைப்பழம் போல் தற்பெருமை பேசித் திரிந்தால் ஒருநாள் கிழிபடுவோம். ஆனால் கற்பூரம் போல் அமைதியாக இருந்துவிட்டால், இருக்கும் வரை ஓளிவீசி இறுதியில் மீதமின்றி இறைவனோடு இரண்டறக் கலந்து போவோம்.

Friday, 19 February 2016

மூவர் சமாதி திருசெந்தூர் .

இயற்கை எழில் சூழ்ந்த திருச்செந்தூர் கடற்கரையில் முருகப்பெருமான் குருவாக அருள்பாலிக்கிறார். மிக நீண்ட கடற்கரையில் இயற்கை எழில் சூழ இதன் அருகே அமைந்துள்ளது மூவர் சமாதி கோவில். முருகனை ஆராதனை செய்து முருகனுக்கு கோவில் எழுப்பி மகான்களாக வாழ்ந்த, மூன்று துறவிகளுக்கு இங்கு கோவில் எழுப்பபட்டுள்ளது. 

கடற்கரை அருகே சென்று மூவர்சமாதி எங்கே இருக்கிறது எனக்கேட்டால் சொல்வார்கள். அளவுக்கதிகமான சக்தியை தன்னகத்தே கொண்டுள்ள இந்த ஜீவசமாதி கோவில்கள் உள்ளுக்குள் புத்துணர்ச்சியை தூண்டி விட்டு உள்ளுக்குள் இருக்கும் ஆற்றலை தூண்டிவிடும் வலிமை வாய்ந்தது. இக்கோவில்

ஒருவர் ஜீவ சமாதி ஆகியிருந்தாலே அந்த கோவிலில் நல்லவிதமான அதிர்வலைகள் நிறைந்து காணப்படும். 

இங்கு அருகருகே மூவர்

சமாதியாகியுள்ளதால் மிகப்பெரும் சக்தி வாய்ந்த இடமாக காட்சியளிக்கிறது. இங்கு உட்கார்ந்து திருச்செந்தூர் முருகக்கடவுளையும் இங்குள்ள மூன்று சுவாமிகளையும் மனக்கண் முன் நிறுத்தி தியானம் செய்தால் மனம் இலகுவாக இருக்கும் அமைதியடையும்.

 பதினாறாம் நூற்றாண்டில் நெல்லை மாவட்டம் திருவாங்கூர் மன்னர் ஆட்சிக்குட்பட்டிருந்த போது, திருச்செந்தூர் முருகன் கோவில் சீரமைக்கப்பட்டதாக கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன. 

எனினும் தற்போது உள்ள கோவில்களை உருவாக்கியவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் காசி சுவாமிகள், மௌன சுவாமிகள் மற்றும் ஆறுமுக சுவாமிகள் என்ற மூவர் சுவாமிகள் ஆவர். இவர்கள் மூவரும் தங்களது காலங்களில் கோயிலைச் சுற்றி மண்டபங்களையும், கோபுரங்களையும் அமைத்துள்ளனர். இவர்கள் மூவரும் இத்தலத்திலேயே ஜீவசமாதியும் அடைந்துள்ளனர். 

இவர்களது சமாதிகள் இன்றும் கடற்கரையை ஒட்டி காணப்படுகின்றன.  இவர்களுக்கு பின்னர் வந்த தேசிக மூர்த்தி சுவாமிகள் ராஜகோபுரத்தை கட்டியதாக கூறப்படுகிறது.

குருவுக்கு உகந்த வியாழக்கிழமைகளில் இங்கு சென்று நம் கோரிக்கைகளை வைத்து இந்த ஜீவசமாதிகளில் உட்கார்ந்து மனதார தியானித்து வந்தால் நம் மனக்குறை தீர்ந்து சிறப்பாக வாழலாம். 

தியானம் செய்வதற்க்கு ஏற்ற அமைதியான கடற்கரை சூழலில் இக்கோவில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.






Monday, 15 February 2016

மவுனகுரு நிர்வாணசுவாமிகள்

கசவனம் பட்டி -"மவுனகுரு நிர்வாணசுவாமிகள்' 

யானைகள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்ததன் காரணமாக விநாயக பெருமானின் பெயரை கொண்டு ""கஜவனம் பட்டி"" என விளங்கிய ஊர் தற்போது கசவனம் பட்டி என்று அழைக்கப் படுகிறது..

பல ஆண்டுகளுக்கு முன், 12 வயது சிறுவன் ஒருவன் இப்பகுதிக்கு வந்தான். ஆடை ஏதும் அணியாமல், நிர்வாணமாகவே இப்பகுதிகளில் சுற்றித் திரிந்தான். முதலில் சிறுவன்தானே, என கருதிய மக்கள் அவனைக் கண்டுகொள்ளவில்லை. நாளடைவில் அவன், ஆடையே அணியாமல் எப்போதும் நிர்வாணமாகவே ஊருக்குள் வந்தான். இதைக்கண்ட சிலர், அவனுக்கு ஆடைகளை அணிவித்துப் பார்த்தனர். ஆனால், அவன் அதை கிழித்து எறிந்து விட்டான். இந்த உலகம் மாயை என்னும் போலியான ஆசைகளால் நிறைந்தது. இதில், அனுபவிக்க ஏதுமில்லை. இதைப் புரிந்து கொண்டாலே ஞானம் கிடைத்து விடும். இதை, தனது உருவத்திலேயே உணர்த்தியதால், போகப்போக மக்கள் மரியாதை கொடுத்து நடத்தினர். அவரது பெயர் தெரியாமல் முதலில் பெருமாள் சாமி என அழைத்தனர். எப்போதும் நிர்வாணமாகவே இருந்ததால், ஒருகட்டத்தில் நிர்வாணசுவாமி என்றே அழைத்தனர். அவர் ஏதும் பேசாமல் அமைதியாக இருந்ததால் பிற்காலத்தில் இவர் "மவுனகுரு நிர்வாணசுவாமிகள்' என அழைக்கப்பெற்றார். தன்னிடம் உபதேசம் பெற வந்தவர்களிடம்கூட, அவர் அதிகம் பேசியதில்லை. இங்கேயே முக்தியடைந்த இவருக்கு, சமாதிப்படுத்திய இடத்தில் ஆலயம் கட்டப்பட்டுள்ளது.

இத்தலத்திற்கு அருகில் முத்தாலம்மன் கோயில் உள்ளது. இங்குதான் நிர்வாண சுவாமிகள் தங்கியிருந்தார். இவரது உயிர் பிரிந்ததும் இங்குதான். இக்கோயிலில் அவர் பயன்படுத்திய கட்டில் உள்ளது.

பிரதான சன்னதியில் அதிஷ்டானம் செய்த இடத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதற்கு பின்புறம் நிர்வாண நிலையில் ஜோதி மவுனகுருசுவாமிகள் அமர்ந்திருக்கிறார். இவருக்கான மற்றொரு உற்சவர் சிலையும் இங்குள்ளது. பிரதோஷ பூஜையின்போது இவர் கோயிலை வலம் வருவார் ..

பழனி மூட்டை சாமிகள்

பழனி அருகே கணக்கன்பட்டியை சேர்ந்தவர் காளிமுத்து என்ற பழனி சுவாமிகள். எப்போதும் அழுக்கு மூட்டைகளுடன் பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வந்ததால் இவர் மூட்டைசித்தர் என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்டார். 

பழநியில் இருந்து திண்டுக்கல் செல்லும் சாலையில் சுமார் 12 கி.மீ. தொலைவில் உள்ளது கணக்கன்பட்டி. சிறு கிராமம். இங்குள்ள டீக்கடை, மளிகைக்கடை, பங்ச்சர் கடை, பெட்டிக்கடை என்று எல்லா கடைகளிலும் வீடுகளிலும் இவரது வண்ணப்படம் போட்ட நாட்காட்டி மாட்டப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் தேதி கிழித்து, அவர் முகத்தில்தான் விழிக்கிறார்கள். ஊர்க்காரர்கள் இவரை 'பகவான் ஞான வள்ளல்' என்றும், 'சத்குரு' என்றும் அழைக்கிறார்கள். 'சித்தரின் அவதாரம் இவர்' என்கிறார்கள்.

இன்றைக்கு இருக்கிற போலிச் சாமியார்களையும், வேஷதாரிகளையும் எளிதில் அடையாளம் கண்டுபிடித்து விடலாம். எப்படி? பெரும்பாலும் பெண்கள் பிரச்னையில் சிக்குகிறார்கள். அடுத்ததாக, பக்தர்களிடம் பணம் பறிப்பதில் மாட்டிக் கொள்கின்றனர். ''ஆனால், மூட்டை சுவாமிகள் உண்மையிலேயே ஒரு மகான். ஏனென்றால், கடந்த ஐம்பது வருடங்களுக்கும் மேலாக அவரை இந்த பழநியில் அறிந்தவர்கள் ஏராளம். பழநியில் அவருக்கு பக்தராக இருந்த பணக்காரர்கள் பல பேர். மூட்டை சுவாமிகள் நினைத்திருந்தால் எப்படி எப்படியோ அவர்களைப் பயன்படுத்திக் கொண்டிருக்கலாம். ஆனால், அவரது வாழ்க்கை முறையே வேறு. நம்மிடம் இருக்கும் குறைகளை அகற்றுவதற்காகவே இவர் அவதரித்திருக்கிறார்.

எவரேனும் இவரிடம் பணமோ, பொருளோ கொடுக்க வந்தால், முதலில் அவர்களை விரட்டி விடுவார். எவரிடம் இருந்தும் சல்லிக் காசு வாங்க மாட்டார். யாரிடமும் எதுவும் கேட்கவும் மாட்டார். இப்போது கூட இவரின் சில பக்தர்கள், இதே கணக்கன்பட்டியில் இவர் தங்குவதற்காக ஒரு 'சித்சபை' கட்டி வருகிறார்கள். அதற்கு இவர் முறையாக ஒப்புதல் தரவில்லை. அந்த அளவுக்கு ஒதுங்கியே இருப்பார்.

பழநி மலைக்கு எதிரே உள்ள இடும்பன் மலை யில் சில காலம் தங்கி இருந்தாராம். பல நேரங்களில் இவர் எங்கு இருக்கிறார் என்பதை பக்தர்கள் எவராலும் கண்டுபிடிக்க முடியாது. உச்சி வேளையில் கொளுத்துகிற வெயிலில் மலைக்கு மேலே தகிக்கிற ஒரு பாறையில் அமர்ந்து தியானத்தில் இருப்பார்; பேயெனக் கொட்டுகிற மழையில் முழுக்க நனைந்தபடி அதே பாறையில் படுத்திருப்பாராம். இயற்கையின் எந்த ஒரு சக்தியும் இவரை பாதித்ததே இல்லையாம்.

மூட்டை சுவாமிகளின் அற்புதங்கள் என்று ஒரு பக்தர் நம்மிடம் சொன்னவை: ''ஒரு மழைக் காலத்தில், அதிக வோல்டேஜ் மின்சாரம் பாய்ந்து கொண்டிருக்கும் மின் வயர் ஒன்று அறுந்து, நடு ரோட்டில் விழுந்து கிடந்தது. இதைக் கண்டு அனைவரும் அஞ்சி நடுங்கி அந்தப் பக்கமே செல்லாமல் இருந்தனர். சுவாமிகள் ரொம்ப சாதாரணமாகச் சென்று அந்த வயரைத் தன் கையால் எடுத்து அப்புறப்படுத்திப் போட்டார்...

சுவாமிகள் தியானத்தில் ஒரு முறை பேச்சற்றுக் கிடந்தபோது, பதறிப் போன சேலத்து பக்தர் ஒருவர், இவரைக் கொண்டு போய் ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டுப் போயிருக்கிறார். அங்கு சுவாமிகளைப் பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள், 'மூச்சே இல்லை. இறந்து விட்டார்!' என்று ரிப்போர்ட் எழுதி, இவரை மார்ச்சுவரியில் வைத்திருக்கிறார்கள்.

அடுத்த சில மணி நேரங்களில் சுவாமிகள், பழநியில் ஒரு மலையில் தவத்தில் இருந்தாராம். மார்ச்சுவரியில் சுவாமிகள் இருந்த அறையைத் திறந்து பார்த்த ஆசாமிக்கு அதிர்ச்சி... அங்கே இவர் இல்லை.

பழநி கல்லூரியில் வேலை பார்த்து வந்த பேராசிரியர் ஒருவர், இன்ன தேதியில் இறக்கப் போகிறார் என்பதை முன்கூட்டியே சொல்லி இருந்தார் சுவாமிகள். எந்த ஞான திருஷ்டி மூலம் சுவாமிகள் சொன்னாரோ தெரியவில்லை...

சுவாமிகள் சொன்ன தேதியில் திடீரென உடல் நலக் குறைவாகி இறந்து விட்டார்.

- இப்படி நிறைய சம்பவங்களை அனுபவங்களாகச் சொல்லலாம்.''

மூட்டை சுவாமிகளின் இயற்பெயர் 'பழனிச்சாமி' என்று ஓர் அன்பர் சொன்னார். சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன் வரை மூட்டை ஸ்வாமிகள் வசித்து வந்த இடம்: பழநி- திண்டுக்கல் மெயின் ரோட்டில் உள்ள பழநி கலைக் கல்லூரி வாசலில். கலர் வேஷ்டி... மேலே ஒரு முழுக்கைச் சட்டை... தலையில் ஒரு முண்டாசு. பெரும்பாலும் வேஷ்டியை மடித்துக் கட்டி இருப்பார். இவர் உடுத்தி இருக்கும் துணிகள் பெரும்பாலும் கந்தலாகவே காணப்படும்.

இவரது இடது தோள்பட்டையில் ஒரு பெரிய மூட்டை தொங்கிக் கொண்டிருக்கும். ரொம்ப கனமான மூட்டை. அதற்குள் என்ன இருக்கிறது என்பது எவருக்கும் தெரியாது. புளிய மரத்தின் அடியில், தான் ஓய்வெடுக்கும்போது மரத்தின் ஒரு கிளையில் தன் கண்களில் படும்படி மூட்டையைத் தொங்க விட்டிருப்பார். ஆர்வக்கோளாறின் காரணமாக- சில நேரங்களில் எவரேனும் அந்த மூட்டை அருகே நெருங்கினால் போதும்... கன்னாபின்னாவென்று கத்தி விட்டு, அவர்களை விரட்டி விடுவார். தான் செல்லும் இடங்களுக்கெல்லாம் அந்தக் கந்தல் மூட்டையை விடாமல் தூக்கிச் செல்வதால், அந்தப் பகுதிவாசிகளால் 'மூட்டை ஸ்வாமிகள்' என அழைக்கப்பட ஆரம்பித்தார் இவர்.

பழநி கலைக் கல்லூரியின் வாயிலில் ஏராளமான புளிய மரங்கள் இருக்கின்றன. அதில் ஏதாவது ஒன்றின் நிழலில் இவர் ஓய்வெடுத்துக் கொண்டிருப்பார். சில நேரங்கள் திடீரென்று காணாமல் போய் விடுவார். எப்போது வருவார் என்றும் தெரியாது. 'சாமீ மலைக்கு மேலே போயிருக்கு' என்பார்கள். அவர் இருக்கும் இடம் இதுதான் என்று பிறரால் அடையாளம் சொல்லக் கேட்டு, அவரைத் தேடி அங்கே போனால் - அவர் இருக்க மாட்டார்.

தெருவில் சுவாமிகள் அவர்பாட்டுக்கு நடந்து கொண்டிருப்பார். சில நேரங்களில் உட்காருவார். இங்கு வந்திருக்கிற ஒவ்வொருவருக்கும் உள்ள குறைபாடுகளை அவர் சூட்சுமமாக உணர்வார். வந்திருப்பவர்களின் கஷ்டங்களையும் பிரச்னைகளையும் வெறும் வாயில் போட்டு மென்று, அதை வெளியே துப்பி விடுவார். சுவாமிகள் சஞ்சரித்துக் கொண்டிருக்கிற உலகமே வேறு. எனவே, அவரின் அருகே போனால் அது அவருக்குத் தொந்தரவு தருவதாகவே அமையும்.

தவிர, சுவாமிகள் சில நேரங்களில் வந்திருப்பவர்களை விரட்டியும் விடு வார். உடனே, அங்கிருந்து அவர்கள் போய் விட வேண்டும். ரொம்ப நேரம் இவரை தரிசனம் பண்ணிக் கொண்டு இங்கேயே உட்கார்ந்திருக்கலாம் என்று இருக்கக் கூடாது. வந்தோமா, தரிசனம் பண்ணினோமா என்று நகர்ந்து விட வேண்டும்.

சிலரை ஏதோ வேலைகள் செய்யச் சொல்வார். என்ன வேலை தெரியுமா? மண்ணை அள்ளிக் குவிக்கச் சொல் வார். சாக்கடைத் தண்ணீரை ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்தில் மாற்றி ஊற்றச் சொல்வார். இதற்கெல்லாம் பக்தர்கள் முகம் சுளிக்கக் கூடாது. இதன் மூலம் அவர்களது வினையை சுவாமிகள் விரட்டுகிறார். அதுதான் நிஜம்.

பொதுவாக சித்தப் புருஷர்கள் ..மகான்கள் தன்னலம் இல்லாதவர்கள். சிலரெல்லாம் இப்பொழுது எப்படி எப்படியோ இருக்கிறார்கள். ஆனால், இவர் ஒரு மாட்டுக் கொட்டகை போன்ற ஒரு இடத்தில்தான் தங்கினார் . எங்கேயாவது சென்று உட்கார்ந்து கொண்டு எதையாவது சொல்லிக் கொண்டு இருப்பார். இதையெல்லாம் நம்மால் புரிந்துகொள்ள முடியாது.

இந்த மகான் சமாதி அடைந்தது  (01 -03-2015)


..இப்போதும் நம்மோடு வாழ்ந்து கொண்டு ,பக்தர்களின் பாவங்களை மூட்டையாக சுமந்து , உலகம் மெங்கும் தம் பக்தர்களை காத்து ரட்சித்து அருள் புரியும் பழனி கணக்கம் பட்டியில் வாழும் ஞான வள்ளல் சற்குரு பழனி மூட்டை சுவாமிகள் மலரடிகள் போற்றி போற்றி !!!

Saturday, 13 February 2016

அப்பா பைத்தியம் சாமிகள

ஒரு மகானின் அவதாரம் என்பது இறைவனின் வழிகாட்டுதலுக்கும் தீர்மானத்துக்கும் உட்பட்டே அரங்கேறுகிறது. அப்படி இறைவனால் தீர்மானிக்கப்பட்டு பூமியில் தோன்றிய போற்றத்தக்க ஓர் அவதாரம் தான் தவத்திரு.அப்பா பைத்தியம் சாமிகள்..

சுவாமிகளின் இயற்பெயர் முத்து. ஜமீன் பரம்பரையில் பிறந்தவர். 1859-ம் வருடம் சித்திரைத் திங்கள் 28-ம் நாள் புனர்பூச நட்சத்திரத்தில் கரூவூர் ஜமீன் குடும்பத்து வாரிசாக அவதரித்தார் .எட்டு மாத குழந்தையான சுவாமிகளை கண்டுணர்ந்த பசிக்கு ஒதுங்கிய பரதேசி ஒருவர் “இது தெய்வக்குழந்தை” என்று அருள்வாக்கு சொல்லி மறைந்தார்.. சுவாமிகளின் எட்டாவது மாதத்தில் தன் தாயையும்,பதினாறாம் வயதில் தந்தையையும் இழந்தார். தன் தந்தையை இழந்தவுடன் தான் தனிமையாகி விட்டதாக உணர்ந்தார். யாரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டு கிளம்பி பழனி செல்லும் வண்டியை பிடித்து பழனி மலையை அடைந்தார். பழனியில் விநாயகர் கோயிலில் அமர்ந்து கொண்டு அழுதார். அப்போது ஆடையில்லாமல், பிச்சைக்காரர் போன்று அழுக்கான தோற்றமளித்த ஒருவர் வந்து நீ யார் ? ஏன் தனியாக அமர்ந்து அழுது கொண்டிருக்கிறாய் ? உன் தாய்-தந்தையர் எங்கே ? என்று வினவினார். அவர் தான் தவத்திரு ஸ்ரீ அழுக்கு சுவாமிகள்..என்னுடன் வா என்று சொல்லி சுவாமிகளை மூன்று நாட்கள் காடு,மலை என்று எங்கெல்லாமோ அழைத்துச் சென்றார். கடைசியில் ஒரு குகைக்கு வந்தடைந்து அதனுள்ளிருந்து ஒரு ஏட்டுச் சுவடியை கொண்டு வந்து கொடுத்து சுவாமிகளை படிக்கச் சொன்னார்.நீ ஆண்டவன் குழந்தை -உன் முன்னோர்கள் செய்த புண்ணியத்தால் நீ நாட்டுக்கு நல்லது செய்ய வந்து பிறந்துள்ளாய்”என்று சொல்லி சுவாமிகளின் பிறப்பின் இரகசியத்தை அறிவித்து சில நாட்களில் சமாதியானார். 

தனக்கு இருந்த ஒரே ஒரு ஆதரவும் மறைந்த பின் சுவாமிகள் அங்கிருந்து புறப்பட்டு கன்னியாகுமரி சென்றார். காடு மலைகளை சுற்றி திரிந்தார்.சுவாமிகள் ஊர் ஊராக சென்றார். மக்களின் குறைகளை தீர்த்து வைத்தார். தன்னை நாடி வந்தவர்களுக்கு இன்னருள் புரிந்தார். தன்னை மனதினில் இருத்தி தியானிப்பவர்களுக்கு கஷ்டங்களைப் போக்கி நல்லாசி வழங்கினார். பக்தர்கள் அவரை “அப்பா அப்பா” என்று தான் கூப்பிடுவார்கள். ஆனால் சுவாமிகள் தன்னை ஒரு பைத்தியம் என்று தான் சொல்லிக் கொள்வார்கள். அதனால் அவர் “அப்பா பைத்தியம் சுவாமிகள்” என்றே அழைக்கப்பட்டார். 

அழுக்கு சாமிகள் பொள்ளாச்சி வேட்டைக்காரன் புதூரில் ஜீவசமாதி அடைந்துள்ளார். சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு விழுப்புரம் பகுதியில் சுற்றி திரிந்த அப்பா பைத்தியசாமிகளை சில அன்பர்கள் புதுவைக்கு அழைத்து வந்தனர். 1995 வரை புதுவையில் தங்கியிருந்தார். அதன் பின் புதுவையில் இருந்து சாமிகள் பிற ஊர்களுக்கு சென்றார். சுவாமிகள் நிறைவாக தமது 141-ஆம் வயதில் சேலத்தில் உள்ள சூரமங்கலம் என்ற ஊரில் “சற்குரு மாளிகை” எனுமிடத்தில் பிரமாதி ஆண்டு 11.02.2000 தை அன்று 28-ம் நாள் அசுவினி நட்சத்திரத்தில் சமாதியானார்.


Sunday, 7 February 2016

ஜீவசமாதிகள் !அருமை, பெருமைகள்

தமிழ்நாட்டில் இருக்கும் சித்தர்பீடங்கள்,சூட்சுமமாக இருந்து நம்மைக் காக்கும் மகான்களின் ஜீவசமாதிகளை வழிபடும் சூட்சும வழிபாட்டு முறை
சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புவரையிலும், ஆவி வழிபாடுதான் நமது தமிழ்நாட்டில் இருந்துவந்தது.அக்காலத்தில் இருந்த ஆன்மீக அருளாளர்கள் " கலிகாலத்தில் மனிதர்களின் வாழ்க்கை,சிந்தனை முறை எப்படி இருக்கும்?" என்பதை சிந்தித்தன் விளைவாக ஆவி வழிபாட்டு ஸ்தலங்களான ஜீவசமாதிகள் மற்றும் சித்தர்களின் ஜீவசமாதிகளை கோவில்களாக மாற்றினார்கள்.எந்த மகான் எந்த கடவுளின் மீது பிரியமாக இருந்தாரோ, அல்லது எந்த கடவுளை வழிபட்டாரோ அந்த தெய்வத்தின் சிலை அவரது ஜீவசமாதியின் மீது அல்லது அருகில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பெரும்பாலான மகான்களும், சித்தர்களும் சிவனை வழிபட்டிருக்கின்றனர். அபூர்வமான சிலர் விநாயகரையும், முருகக்கடவுளையும், சக்தியையும், முனீஸ்வரரையும், கருப்பசாமியையும் வழிபட்டிருக்கின்றனர். அதனால், அந்த ஜீவசமாதிகளின் மீது அல்லது அருகில்(ஒரே கோவிலுக்குள்) உரிய தெய்வங்கள் சமைக்கப்பட்டு, கோவில்களாக மாற்றப்பட்டுள்ளன.
உதாரணமாக சித்தர் போகரின் வழிபாடு முருகக்கடவுளின் வழிபாடு ஆகும். அதனால், பழனிமலையில் முருகக்கடவுளின் கோவில் உருவானது.நாம் பழனி முருகக்கடவுளை தொடர்ந்து, முருகக்கடவுளின் வழிபாட்டு முறைகளுக்கு ஏற்றவாறு வழிபட்டால்,போகர் அகமகிழ்ந்து, நமது கோரிக்கைகளை நிறைவேற்றுவார்; பிரச்னைகளைத் தீர்ப்பார்;நோய்களைக் குணப்படுத்துவார்;துன்பங்களை நீக்குவார்;
ஜீவசமாதிகளை நாம் எப்படி வழிபட வேண்டும்?
முழுக்க முழுக்க ரோஜாப்பூக்களால் கட்டப்பட்ட மாலை, ஒருகிலோவுக்கு குறையாமல் டையமண்டு கல்கண்டு,அரை கிலோவுக்குக் குறையாமல் விதையில்லாத கறுப்பு திராட்சைப்பழங்கள்,கொஞ்சம் விதையில்லாத பேரீட்சைப்பழங்கள் இத்துடன் கொஞ்சம் வெற்றிலையும்,கொட்டைப் பாக்கும்,சந்தனபத்திக் கட்டும்,ஆறு நாட்டு வாழைப்பழங்களும் கொண்டு வந்து பத்தி பொருத்தி,தேங்காய் உடைத்து,கற்பூரம் கொளுத்தி,சிகப்பு ரோஜாக்களால் கட்டப்பட்ட மாலையை ஜீவசமாதியில் உள்ள தெய்வச்சிலைக்கு அணிவிக்க வேண்டும். நெய்தீபம் ஜீவசமாதியின் முன்பு ஏற்ற வேண்டும்.
எந்த எந்த நாட்களில் ஜீவசமாதி வழிபாடு செய்யலாம்?
         பகைவரோடு போராடி,போராடி களைத்துபோன நேர்மையாளர்கள், தங்களது நியாயமான பிரச்னைகள் தீர திங்கட்கிழமை மாலை 5 மணி முதல் 7 மணிக்குள் இவ்வாறு 8 திங்கட்கிழமைகளுக்கு மட்டும் வழிபாடு செய்ய வேண்டும்;
குலதெய்வம் தெரியாதவர்கள், குலதெய்வத்தின் கோபத்துக்கு ஆளானவர்கள், குலதெய்வ வழிபாட்டை மறந்தவர்கள்,குல தெய்வத்தை அறியாமல் இருந்து , அதனால் கஷ்டப்படுபவர்கள் அனைவரும் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு மேல் 7 மணிக்குள் இவ்வாறு வழிபாடு செய்ய வேண்டும்; இப்படி 8 செவ்வாய்க்கிழமைகளுக்கு தொடர்ந்து ஜீவசமாதி வழிபாடு செய்ய வேண்டும்;
வேலைக்குப் போய்க் கொண்டிருப்பவர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்கள் பொருளாதார முன்னேற்றம் அடைய விரும்புவோர், புதன் கிழமைகளில் மாலை 5 மணிக்கு மேல் 7 மணிக்குள் இவ்வாறு ஜீவ சமாதி வழிபாடு செய்ய வேண்டும்; இவ்வாறு தொடர்ந்து 8 புதன்கிழமைகளுக்குச் செய்து வர, நல்ல பொருளாதாரத் தன்னிறைவை அடைய முடியும்.
தனது ஆன்மீக முன்னேற்றத்திற்கு தகுந்த குருவைத் தேடுபவர்கள், வியாழக்கிழமைகளில் மாலை 5 முதல் 7 மணிக்குள் இவ்வாறு ஜீவசமாதி வழிபாடு செய்ய வேண்டும். இப்படி 8 வியாழக்கிழமைகளுக்கு மட்டும் வழிபாடு செய்தாலே போதுமானது;
பணரீதியான பிரச்னைகள் இருப்போர், பண நெருக்கடியில் இருப்பவர்கள் அதிலிருந்து மீள வெள்ளிக்கிழமை மாலை 5 முதல் 7 மணிக்குள் இவ்வாறு ஜீவசமாதி வழிபாடு செய்ய வேண்டும். இப்படி தொடர்ந்து 8 வெள்ளிக்கிழமைகளுக்கு மட்டும் வழிபாடு செய்தாலே போதுமானது;
பண நெருக்கடி, தொழில் மந்தநிலை, குடும்பப் பிரச்னைகள் என எல்லாவிதமான பிரச்னைகளும் தீர விரும்புவோர் சனிக்கிழமை மாலை 5 முதல் 7 மணிக்குள் இவ்வாறு ஜீவசமாதி வழிபாடு செய்துவர வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 8 சனிக்கிழமைகளுக்கு மட்டும் வழிபாடு செய்துவிட்டாலே போதுமானது.
நீண்டகாலமாக வழக்குடன் போராடிக் கொண்டிருப்பவர்கள் (எந்தப் பிரச்னையாக இருந்தாலும் சரி) ஞாயிறு மாலை 5 முதல் 7 மணிக்குள் மேற்கூறியவாறு ஜீவசமாதி வழிபாடு செய்ய வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 8 ஞாயிற்றுக்கிழமைகளுக்கு வழிபாடு செய்தால் போதுமானது.
இந்த ஜீவசமாதி வழிபாடு செய்பவர்கள் யாராக இருந்தாலும் சரி, அவர்கள் கண்டிப்பாக அசைவம் சாப்பிடுவதை அடியோடு நிறுத்தியாக வேண்டும்; இது ரொம்ப முக்கியம். முட்டை, முட்டை கலந்த கேக், புரோட்டா என மறைமுக அசைவ உணவுகளையும் தவிர்த்துவிட்டே இந்த ஜீவ சமாதி வழிபாடு செய்ய வேண்டும்.
யார் எந்த ஊரில் இருக்கிறார்களோ, அந்த ஊரில் இருக்கும் ஏதாவது ஒரு ஜீவசமாதியில் இந்த வழிபாடுகளை முடிக்கலாம்; துக்கம், பிறப்பு முதலியவற்றால் தொடர்ந்து 8 வாரங்கள் செய்ய முடியாவிட்டாலும், விட்டு விட்டு செய்தாலும் போதுமானது. அதே சமயம் 8 வாரத்துக்கு மேல் இந்த ஜீவ சமாதி வழிபாடுகளை பின்பற்றக் கூடாது.
ஓம்சிவசிவஓம் எனும் மந்திரம்
நாம் நமது வீட்டில் ஒரு மந்திரத்தை ஒரு முறை ஜபித்தால், பத்துமுறை ஜபித்தமைக்கான பலன்கள் கிடைக்கும்;
நமது ஊரில் இருக்கும் பழமையான சிவாலயத்தில் ஒரு முறை ஒரு மந்திரத்தை ஜபித்தால்,1000 முறை ஜபித்ததற்கான பலன்கள் கிடைக்கும்;
மலை மேலே இருக்கும் ஒரு கோவிலில் ஒரு மந்திரத்தை ஒருமுறை ஜபித்தால், 1,00,00,000 தடவை ஜபித்தபலன்கள் நம்மை வந்து சேரும்;
கடலோரக் கோவிலில் ஒரு மந்திரத்தை ஒருமுறை ஜபித்தால், 2,00,00,000 தடவை ஜபித்ததற்குரிய மந்திர ஜபசக்தி நமக்கு உருவாகும்;
இந்த எண்ணிக்கை சாதாரண நாட்களில், ஜபித்தால் கிடைக்கும் எண்ணிக்கை ஆகும். இதே மந்திரஜபத்தை தமிழ் வருடப்பிறப்பு, தமிழ்மாதப்பிறப்பு, அமாவாசை, பவுர்ணமி, கிரகண நாட்களில் ஜபித்தால், மேலே கூறிய எண்ணிக்கையோடு 100 கோடி மடங்கு பலன்களாக நம்மை வந்து சேரும்.
எந்த ஒரு மந்திரத்தையும் நாம் 1,00,000 தடவை ஜபித்தபின்னரே, அந்த மந்திரத்துக்கு உயிர் உண்டாகி, நம்மை பாதுகாக்கத் துவங்கும்; ஆனால், நாம் ஓம்சிவசிவஓம் மந்திரஜபம் மட்டும் 10,000 தடவைகளுக்கு ஜபித்துவிட்டாலே, ஓம்சிவசிவஓம் நம்மை பாதுகாக்கத் துவங்கும்;
1,00,000 தடவை ஓம்சிவசிவஓம் ஜபிக்கும் வரையிலும், நமக்கு ஓம்சிவசிவஓம் ஜபிக்கமுடியாத அளவுக்கு பல தடைகள் வரத்தான் செய்யும்;
நமது மன உறுதியாலும், குருபக்தியாலும், சிவபெருமானாகிய அண்ணாமலையாரின் மீதான பாசத்தாலும் அந்த தடைகளை முறியடித்து, ஓம்சிவசிவஓம் ஜபத்தை ஒரு லட்சம் தடவை வரை ஜபித்து முடித்துவிட வேண்டும்; அதன் பிறகு ஒரு நாளுக்கு 108 முறை அல்லது 15 நிமிடம் வரையிலும் ஓம்சிவசிவஓம் ஜபித்துவருவது நல்லது & அவசியம்.
இப்படி தினமும் 108 முறை வீதம் நமது ஆயுள் முழுவதும் ஒரு நாள்கூட விடாமல் ஓம்சிவசிவஓம் ஜபித்துவர வேண்டும்.
நீதி , நேர்மை, தர்மப்படி வாழ்ந்துவருபவர்களில் பெரும்பாலானவர்களை உடன்பிறந்தோர், பெற்றோர், வாழ்க்கைத் துணை, குழந்தைகள் கூட ஆதரிப்பதில்லை; உதவுவதில்லை; அதே சமயம், நீதியை நேர்மையைப் பின்பற்றுபவர்களுக்கு ஒரு நிரந்தரமான வேலை அல்லது தொழில் அல்லது போதுமான செல்வச் செழிப்பு இல்லாத நிலை இருந்தால்,அவர்கள் பணத்துக்கு அடிமையாகியிருக்க வேண்டும். பணத்துக்காக பலர் தனது நேர்மையான, நீதியான வாழ்க்கையை தொலைத்துவிட்டு, கலியின் கொடுமையால் அநீதியான, பேராசை மிகுந்த வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையே இந்த கலிகாலத்தில் இருக்கிறது. இருந்தும் கூட, பணக்கஷ்டம் வந்தபோதும் கூட, தர்மம், நீதி, நேர்மையைக் கைவிடாதவர்கள் சில ஆயிரம் பேர்கள் தமிழ்நாடு முழுவதும் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களைத் தான் ஆன்மீகக்கடல் தேடிக்கொண்டிருக்கிறது; இவர்களுக்குத் தேவையான தெய்வீக சக்தியை, நியாயமான செல்வ வளத்தை இந்த ஓம்சிவசிவஓம் மந்திரஜபம் தரும்;
இவர்கள் செய்ய வேண்டிய தெல்லாம் அருகில் உள்ள ஜீவசமாதிகளில் தினமும் 15 நிமிடம், மஞ்சள் துண்டு விரித்து, கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து ,இரு உள்ளங்கைகளிலும் தலா ஒரு ருத்ராட்சத்தை வைத்து, ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும். இப்படிச் செய்துகொண்டே வர வேண்டும். இதுவே இந்த தர்மவான்களுக்குத் தேவையான தெய்வீக பாதுகாப்பு, செல்வ வளம், மன வலிமை, உடல் நலத்தைத் தந்துவிடும்.
இப்படி இருப்பவர்களும் தொடர்ந்து தர்மப்படி வாழமுடியாத அளவுக்கு ஏதாவது ஒரு கெட்டபழக்கத்தில் வீழ்ந்து கிடக்கிறார்கள்; உதாரணம் :காதல், கள்ளக்காதல், இணையத்தில் இருக்கும் காம இணையதளங்களுக்கு அடிமையாகிவிடுதல், சூதாட்டம், கிரிக்கெட் பைத்தியம், குடிப்பழக்கம், போதை மருந்துகள் அடிக்கடி பயன்படுத்துவது, மனைவி அல்லது சகோதரி அல்லது மகள் அல்லது தாயை தினமும் அழவைத்துப் பார்ப்பது (அப்படி ஒரு வக்கிரமான குணம்=சாடிஸ்ட்); அரசியலில் ஜெயிக்க மாட்டோம் என்று தெரிந்தும் கூட அரசியல் கட்சியில் தீவிரமாக உழைப்பது; யாருக்கோ உழைத்து அவர்களை பணக்காரராக்குவது; காம மயத்தால் தனது மனைவி மற்றும் குழந்தைகளை கவனிக்காமல் இருப்பது; வாரம் ஒருமுறை கூட மனைவியிடம் தாம்பத்திய உறவு வைத்துக்கொள்ளாமல் இருப்பது; தனது குழந்தைகளின் பாச ஏக்கத்தைப் புரிந்து கொள்ளாமல் இருப்பது; பிறரது கள்ள உறவுகளுக்கு பக்கபலமாக இருப்பது. . . என்று பலவிதமான தவறுகளில் சிக்கியிருப்பவர்கள் அதிலிருந்துமீள முடியாமல் தவிப்பார்கள்;
அப்படி மீள விரும்புவோர், ஒரு நாளுக்கு 15 நிமிடம் வீதம் தினமும் ஓம்சிவசிவஓம் ஏதாவது ஒரு ஜீவசமாதிக்குச் சென்று ஜபித்து வர வேண்டும்; 45 முதல் 90 நாட்களுக்குள் தவறான பழக்கம் எதுவாக இருந்தாலும், தவறான குணம் எப்படிப்பட்டதாக இருந்தாலும் அதிலிருந்து மீண்டு விடுவார்கள். அதன்பிறகும் விடாமல் தினமும் உங்களது ஊரில் இருக்கும் ஜீவசமாதியில் ஓம்சிவசிவஓம் ஜபித்துவர வேண்டும்.

Saturday, 6 February 2016

சித்தர்களின் யோகம் மற்றும் யோக முறைகள்

'யோகம்' என்பது 'யுஜ்' என்பதிலிருந்து 'யோக்' ஆகி வந்திருக்கிறது. அதாவது இணைத்தல் என்ற பொருளில். சிதறும் மனச் சக்தியைக் கூட்டுதல், ஆதியில் இருந்த நிலையில் தன்னைச் சேர்த்தல், யாதுமான சக்தியினிடம் சரணாகதியடைந்து அதனுடன் தன்னைச் சேர்த்தல், விசேஷ புருஷன் அல்லது இறைவனுடன் தன்னை இணைத்தல், - இதுவே யோகம்.

யோக, சமாதி நிலையை அடைய எட்டு அங்கங்களான

1- இயம,
2- நியம,
3- ஆசன,
4- பிராணாயாம,
5- பிரத்தியாகார,
6- தாரண,
7- தியான,
8- சமாதி.

எனப்படும் எட்டு படிகள் கூறப்பட்டதால் இந்த யோகம் 'அஷ்ட்டாங்க யோகம்' எனப்படும், யோக வழியை மனித இனத்துக்குத் தந்தவர் 'ஹிரண்யகர்பர்' என்பவராம். அதை சூத்திரங்களாக்கி வைத்தவர் "மஹரிஷி பதஞ்சலி" என்று சொல்லப்படுகிறது.

அறிவுச் செய்திகளை மறை பொருட்களை உள்ளடக்கி சூத்திரங்களாக வைத்தவர்கள், வேத உண்மைகளை பிரும்ம சூத்திரங்களாக வியாஸரும், பக்தி சூத்திரங்களை நாரதரும்,யோக சூத்திரங்களை பதஞ்சலி முனிவரும் மானிடம் உய்ய செய்துவைத்தனர். இவரை ஆதிசேஷனின் அவதாரமாக சொல்வர். நாரயணனின் படுக்கையே ஆதிசேஷன், சக்தியின் ஒரு விரல் மோதிரமாகியவர், இவ்வுலகை தன் தலையில் தாங்கிக்கொண்டிருப்பவர் எனவும் சொல்கிறார்கள்.

இவர் தந்தை: அத்திரி முனிவர்.
இவர் தாய்: கோணிகா.

இவரின் வேறு பெயர்கள்: அத்ரியின் பிள்ளையாகையால் 'ஆத்திரேயர்', கோணிகாவின் பிள்ளையென்பதால் 'கோணிகாபுத்திரர்'.

இவர் எழுதிய மூன்று நூல்கள்

1- யோகத்தினை விளக்கும் 'யோக சாஸ்திரம்',
2- மொழி இலக்கணமான 'மஹாபாஷ்யம்',
3- ஆயுர் வேத்மாகிய 'சரகம்' என்ற 'ஆத்திரேய சம்ஹிதை'.

ஆக மனம், வாக்கு, உடலு(மெய்)க்கான மூன்று நூல்களைச் செய்தவராகிறார்.

இந்த யோக நிலையை அடையுமுன், உலக வாழ்க்கையில் மேலாக எனப்படும் பொருள், புகழ், திறமை, பலம், சுகம் அடைவதற்கான எட்டு மஹா யோக 'சித்தி'களும் ஏற்படும்

யோக 'சித்தி' என்பது என்ன என்று தேடினால்?

அட்டமா சித்தி என்று மரபாகக் கருதப்படும் எட்டுத் திறமைகள் ஆகும். இவை இயற்கை அளித்த திறமைகள் எனவும் அற்புதத் தன்மை உடையன என்றும் கருதப்படுகின்றன. இவ்வாறான அட்டமா சித்திகளைச் சித்தர்கள் அட்டாங்க யோகப் பயிற்சியினால் பெற்றனர்.

அட்டமா சித்திகள்

1- அணிமா - அணுவைப் போல் சிறிதான தேகத்தை அடைதல்.

2- மகிமா - மலையைப் போல் பெரிதாதல்.

3- இலகிமா - காற்றைப் போல் இலேசாய் இருத்தல்.

4- கரிமா - மலைகளாலும், வாயுவினாலும் அசைக்கவும் முடியாமல் பாரமாயிருத்தல்.

5- பிராத்தி - மனத்தினால் நினைத்தவை யாவும் தன் முன்னே அடைய, அவற்றைப் பெறுதல்.

6- பிராகாமியம் - கூடு விட்டுக் கூடு பாய்தல்.

7- வசித்துவம் - அனைத்தையும் வசப்படுத்தல்.

8- ஈசத்துவம்(இறைத்துவம்) - நான்முகன் முதலான தேவர்களிடத்தும் தன் ஆணையைச் செலுத்தல்.

என்ற பல வியக்க வைக்கும் தகவல்கள் கிடக்கிறது.