இந்த மலையில் இந்த குகையில் இன்ன ஆஸ்ரம பெயர்கொண்டு இத்தனை சித்தர்கள் வாழ்கிறார்கள்... என பல சித்தர்கள் பாடல்களில் வரும் இதைபடித்து கொண்டு மலைகளில் மயங்கி அலையவேண்டாம்.
மக்களுக்குகாக சித்தர்கள் அனைவரும் வணங்கும் படியான ஆலயங்களில் உள்ளனர் என போகர் தம் ஜெனனசாகரதில்.... கீழ்கண்டவாறு கூறுகிறார்..
மானென்ற மைந்தனே மலையிற்றானு
மயங்கி நீயலையாதே யொன்றுகேளே
கேளப்பா மூலவர்க்க மதிமாகுங்
கிடையாத சித்தியெல்லா மிவர்க்கேயெய்தும்
வாளப்பா விந்தவர்க்க மசடோவில்லை
வல்லதொரு மூலமதை வழுத்தக்கேளு
ஆட்டமுடன் பதினெட்டு சித்தரெல்லா
மஷ்டாங்க யோகத்தா லெட்டெட்டாகீ
கூட்டமுட னொவ்வொருவர் சித்துகாட்டிக்
குவலயத்தில் லிங்கமதாய் முளைத்தார்பாரே...!!!
என்கிறார் முடிந்தபொழுதெல்லாம் குருவருள்.. குருதரிசனம் வேண்டி ஸ்தல யாத்திரை செய்யுங்கள்... ஆலயத்தை பிரதட்சணம் செய்யுங்கள் காலகடுக்கும் வரை நீங்கள் செய்யும் பிரதட்சணம் செய்தால் பிரதட்சயமாக சித்தர்கள். தரிசனம் தருவார்கள்..!!!
அதே போல் மலைதலங்களுக்கு சென்று அவற்றின் புனிதத்தை மாசுபடுத்துவது தவறு, வெள்ளியங்கிரி, கொல்லிமலை, பொதியமலை இடங்களுக்கு மட்டும் குரு அனுமதி சித்தர்கள் அறிவுருத்துல் இல்லாமல் தான் தோன்றிதனமாக செல்வது தவறு.!!
அதுவும் பொதியமலையில் சித்தர்கள் அழைப்பில்லாமல் கல்யாண அருவி தாண்டி செல்ல மனிதர்களுக்கு அனுமதி அரவே கிடையாது கல்யாண தீர்த்தம் வரை தான் நரன்களின் எல்லை! மீறி சென்று சந்தனத்தில் குளிக்க போய் சேற்றை பூசிக்க கொண்ட கதையாகிவிடக்கூடாது...!
சதுரகிரி பர்வதமலை போன்ற மலைதலங்களுக்கு செல்கையில் ஆவாரவாரம், ஆட்டம்பாட்டம் இல்லாமல் கெக்கபக்க செக்கபக்க என சிரித்துக்கொண்டு கத்திக்கொண்டும் வீண் விவாதங்கள் செய்து கொண்டும், தேவையில்லாமல் இலைதலை கிள்ளிக்கொண்டும் செல்லாமல் இருப்பது உத்தமம்.
முடிந்தால் இறை நாமக்களை கூறிக்கொண்டு செல்வது நன்று இல்லாவிட்டால் மௌனமாக மலையேறி தரிசனம் செய்து திரும்புவதே உத்தமம். !!! அங்கிருந்து அனாவிசியமாக எதையும் எடுத்துக்கொண்டு வரக்கூடாது...!!
ஓரே ஒரு இளம் தளிரான இலையைக்கொய்தால் ஆயிரம் சிசுகத்தி செய்யபாவம் ஒரு மனிதனை பீடிக்குமப்பா! ஓரே ஒரு மலர்மொட்டை ஒருவன் கொய்தால் பத்தாயிரத்தெட்டு பிறந்த குழந்தைகளை கொன்றதுக்கு சமம் என்று சாதாரண மரம், செடி, கொடிகளுக்கு சொல்கிறார். அகத்தியர். அப்பொழுது மலைத்தலங்களின் மூலிகைகளின் சாபங்களை என்னவென்றுரைப்பது ?
No comments:
Post a Comment