ஸ்ரீராமருக்கு இரு புதல்வர்கள், சீதை லவனை மட்டுமே பெற்றதாகவும், தண்ணீர் பிடிக்க சீதை சென்ற போது லவனை பார்த்துக்கொள்ளுமாறு வால்மீகி முனிவரிடம் கூறி சென்றாள்.
திரும்ப வந்து லவனை சீதை தூக்கி சென்று வெளியே உணவு ஊட்டிக்கொண்டிருந்தாள். இது தெரியாத வால்மீகி முனிவர், குழந்தையை காணாது, சீதை சபிப்பாளோ என்று பயந்து தர்ப்பை புற்களை தன் தவ வலிமையால் உருவேற்றி லவனை போன்ற ஒரு குழந்தையை உருவாக்கினார்.
குசன் என்ற புதிய பிள்ளையையும் சேர்த்து சீதை இரு பிள்ளைகளையும் தன பிள்ளையாகவே வளர்க்கிறாள்.
ராமர் கானகம் வந்து சீதையிடம் இரண்டில் எது நம் குழந்தை, என கேட்கிறார், உடனே தீக்குளித்த சீதை அதையே தன் மகன்களை செய்யச்சொல்ல, லவன் பிழைத்து வர, குசன் மட்டும் யாக தீயில் கருக, ஸ்ரீராமரும் உயிர் தந்து குசனை காக்க, தீயில் கருகியதால் கருப்பா என்று அழைத்தாராம்.
அது முதல் அவர்தான் கருப்பண்ணசாமியானார் என்று ஒரு கதை மக்களால் கருப்பசாமி பற்றி கூறப்படுகிறது.
No comments:
Post a Comment