Wednesday, 31 August 2016

உலகை மாயை என்கிறார்கள். அது எப்படி?

உலகை மாயை என்கிறார்கள். அது எப்படி?
------------------------------------------
முதலில் மாயை என்றால் என்னவென்பதை தெளிவாக புரியவேண்டும். நிஜத்தில் இல்லாத ஒரு பொருள் இருப்பதாக "மனதால் கற்பனை செய்யப்டுவதே" மாயை ஆகும்.

உதாரணமாக, வீதியில் செல்கிறோம் ஒரு பாம்பு அசையாமல் உள்ளது. அருகில் சென்று பார்த்தல் அது பாம்பல்ல வெறும் கயிறு என்ற தெளிவு வருகிறதல்லவா. இதில் இல்லாத பாம்புதான் மாயை.

வெய்யிலில் கானல்நீர், மரத்தில் பேய், கம்பத்தில் திருடன், அசையும் துணியில் ஆவி............ முதலியவை மாயை. இவை எதுவுமே நிஜத்தில் இல்லை. ஆனால் இருப்பதைப்போன்ற ஒரு தோற்றத்தை மனம் கற்பனை செய்கிறது. இவை மட்டுமா, நம்மிடமும் எத்தனை எத்தனை மாயை?

கவுரவம், மானம், அவமானம், அந்தஸ்து, ஜாதி, மதம், இனம்,................. இவைகளில் ஏதாவது ஒரு பொருளை காட்டுங்கள் பாப்போம்? இவை எதுவுமே நிஜத்தில் இல்லை. அனால் மனதில், நம் கற்பனையில் உள்ளது. மானம் போயிற்று என்று கதறுகிறார்கள். ஆனால் அது எங்கே போனதென்றும், அதன் வடிவம் என்னவென்றும் தான் தெரியவில்லை.
கவுரவம் செத்துவிட்டது என்கிறார்கள். அது உயிருடன் இருந்தபோது எப்படி இருந்ததென்றுதான் யாராலும் காண முடியவில்லை. என்னே அறியாமை. என்னே முட்டாள்தனம்.

அதே போலத்தான் உலகமும். இல்லாத உலகை இருப்பதாய் நாம் காண்பதால் அது மாயை.
என்ன உலகம் இல்லையா? அப்போது பார்க்கும் நாங்கள் முட்டாளா? என்கிறீரா!!!
பொறுங்கள்.
உண்மையில் உலகம் என்ற தனிப்பொருள் இல்லை. இருப்பதாக நாம்தான் கற்பனை செய்கிறோம்.
நம் சரீரத்தை பாருங்கள். தலை,கைகள்,கால்கள்,உள்ளுறுப்புகள் என்று பல உள்ளன. ஆனால் கூர்ந்து சிந்தித்தால் இவை பல அல்ல. ஒரே வகையான அனந்தகோடி உயிரணுக்களின் கூட்டமைப்பு தான் நம் உடல் என்பது. ஒரே வகையான செல்களின் கூட்டால் தோன்றும் பலதான அமைப்புதான் நம் சரீரம். இங்கு அனைத்து செல்களும் ஒன்றோடு ஒன்று இணைந்து ஒரு உருவத்தை உண்டாகுவதால், நாம் "ஒரே சரீரமாகதான்" கருதுகிறோம்.

அவ்வாறே, எண்ணற்ற கோள்களும், நட்சத்ரங்களும், விண்கற்களும், எத்தனை எத்தனையோ சூரிய சந்திரர்களும், அசையும் அசையாதவைகளும், இன்னும் என்னெனவோ பொருட்கள் ஒன்று சேர்ந்து இருக்கும் வடிவம் தான் பிரபஞ்சம் அல்லது ப்ரஹ்மம் என்று கூறப்படுவது. இருக்கும் அனைத்துமே ஒன்றோடு ஒன்று ஈர்புவிசை, உஷ்ணம், சீதளம், வெளி, காற்று, ஆகாயம், சூனியம் முதளியவையால் இணைக்கப்பட்டே உள்ளன. ஒன்றேயான இப்பிரபஞ்சத்தை பலதாக பாவிப்பது மாயையாகும்.
அவ்வாறே பிரம்மத்தைதவிர வேறு அல்லாததை, பிரம்மத்தை உலகமாக நாம் பாவிப்பது, கற்பனை செய்வது மாயை. பிரம்மத்தில் உலகம் என்பது நம் கற்பனை. உலகம் நம் கற்பனை. ஆகவே உலகம் மாயை!!!

No comments:

Post a Comment