Wednesday, 31 August 2016

குரு வணக்கம்... ஓர் தெளிவு...

சித்தர்களின் மரபியல் குரு, சிஷ்ய பாரம்பரியத்தின் மீது கட்டமைக்கப் பட்டது. இங்கே குருவே எல்லாவற்றுக்கும் மேலானவராகவும், இறை நிலைக்கு இனையானவராகவும் வைத்துப் போற்றப் படுகின்றனர். குருவை வணங்குவதும் அவர் வழி நிற்றலுமே மேன்மையாக போற்றப் பட்டிருக்கிறது. இத்தனை மகத்துவம் வாய்ந்த இந்த பாரம்பர்யத்தை அறிந்து தெளிய நினைக்கும் எவரும் குரு வழிபாட்டினைப் பற்றி அறிந்திருக்க வேண்டியது அவசியம்.

சித்தர்களின் எந்த ஒரு செயலும், முயற்சியும் தங்களின் குருவினை முன் வைத்தே துவங்கியிருக்கின்றனர். ஒவ்வொரு சீடரும் தன் குருவினை தியானிக்கவும், வணங்கிடவும் தனித்துவமான சூட்சும மூல மந்திரங்களை பயன் படுத்தினர். இதன் பின்னால் இருக்கும் மகத்துவம் நமக்கு பிடிபடாவிடினும் இதன் காரண காரியங்களை குருமுகமாக நிச்சயம் பெற இயலும்.

இந்த பதிவில் மகிமை வாய்ந்த சித்தர்களின் மூல மந்திரத்தினை பகிர்ந்து கொள்கிறேன். இவை மிகவும் முக்கியமானவை.

நந்தீசர் மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் லம் ஸ்ரீ நந்தீச சித்த சுவாமியே போற்றி!"

அகத்தியர் மூல மந்திரம்...

“ஓம் ஸ்ரீம் க்ரீம் ஸ்ரீ அகத்திய சித்த சுவாமியே போற்றி!”

திருமூலர் மூல மந்த்திரம்...

"ஓம் ஸ்ரீம் கெம் ஸ்ரீ மூலநாத சித்த சுவாமியே போற்றி!"

போகர் மூல மந்திரம்...

"ஓம் ஆம் ஊம் ஸ்ரீ மகாபோகர் சித்த சுவாமியே போற்றி!"

கோரக்கர் மூல மந்திரம்...

“ஓம் ஸ்ரீம் க்லம் ஸ்ரீ கோரக்க சித்த சுவாமியே போற்றி!"

தேரையர் மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் லபம் நசீம் ஸ்ரீ தேரைய சித்த சுவாமியே போற்றி!"

சுந்தரானந்தர் மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் ஆம் ஊம் ஸ்ரீ சுந்தரானந்த சித்த சுவாமியே போற்றி!"

புலிப்பாணி மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் கிலீம் ஸ்ரீ புலிப்பாணி சித்த சுவாமியே போற்றி!"

பாம்பாட்டி சித்தர் மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் வசி ஸ்ரீ பாம்பாட்டி சித்த சுவாமியே போற்றி!"

காக புசண்டர் மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் லம் ஸ்வம் ஸ்ரீ காக புசண்ட சித்த சுவாமியே போற்றி!"

இடைக்காடர் மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் ருணம் ஸ்ரீ இடைக்காட்டு சித்த சுவாமியே போற்றி!"

சட்டைமுனி மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் சம் வம் சட்டைமுனி சுவாமியே போற்றி!"

அகப்பேய் சித்தர் மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் சௌம் ஸ்ரீ அகப்பேய் சித்த சுவாமியே போற்றி!"

கொங்கணவர் மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் நசீம் ஸ்ரீ கொங்கண சித்த சுவாமியே போற்றி!"

சிவவாக்கியர் மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் லம் ஸ்ரீ சிவவாக்கிய சித்த சுவாமியே போற்றி!"

உரோமரிஷி மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் கிலம் ஸ்ரீ உரோம ரிஷி சுவாமியே போற்றி!"

குதம்பை சித்தர் மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் சம் ஸ்ரீ குதம்பைச் சித்த சுவாமியே போற்றி!"

கருவூரார் மூல மந்திரம்...

"ஓம் ஸ்ரீம் வம் லம் ஸ்ரீ கருவூர் சித்த சுவாமியே போற்றி!"

உலகை மாயை என்கிறார்கள். அது எப்படி?

உலகை மாயை என்கிறார்கள். அது எப்படி?
------------------------------------------
முதலில் மாயை என்றால் என்னவென்பதை தெளிவாக புரியவேண்டும். நிஜத்தில் இல்லாத ஒரு பொருள் இருப்பதாக "மனதால் கற்பனை செய்யப்டுவதே" மாயை ஆகும்.

உதாரணமாக, வீதியில் செல்கிறோம் ஒரு பாம்பு அசையாமல் உள்ளது. அருகில் சென்று பார்த்தல் அது பாம்பல்ல வெறும் கயிறு என்ற தெளிவு வருகிறதல்லவா. இதில் இல்லாத பாம்புதான் மாயை.

வெய்யிலில் கானல்நீர், மரத்தில் பேய், கம்பத்தில் திருடன், அசையும் துணியில் ஆவி............ முதலியவை மாயை. இவை எதுவுமே நிஜத்தில் இல்லை. ஆனால் இருப்பதைப்போன்ற ஒரு தோற்றத்தை மனம் கற்பனை செய்கிறது. இவை மட்டுமா, நம்மிடமும் எத்தனை எத்தனை மாயை?

கவுரவம், மானம், அவமானம், அந்தஸ்து, ஜாதி, மதம், இனம்,................. இவைகளில் ஏதாவது ஒரு பொருளை காட்டுங்கள் பாப்போம்? இவை எதுவுமே நிஜத்தில் இல்லை. அனால் மனதில், நம் கற்பனையில் உள்ளது. மானம் போயிற்று என்று கதறுகிறார்கள். ஆனால் அது எங்கே போனதென்றும், அதன் வடிவம் என்னவென்றும் தான் தெரியவில்லை.
கவுரவம் செத்துவிட்டது என்கிறார்கள். அது உயிருடன் இருந்தபோது எப்படி இருந்ததென்றுதான் யாராலும் காண முடியவில்லை. என்னே அறியாமை. என்னே முட்டாள்தனம்.

அதே போலத்தான் உலகமும். இல்லாத உலகை இருப்பதாய் நாம் காண்பதால் அது மாயை.
என்ன உலகம் இல்லையா? அப்போது பார்க்கும் நாங்கள் முட்டாளா? என்கிறீரா!!!
பொறுங்கள்.
உண்மையில் உலகம் என்ற தனிப்பொருள் இல்லை. இருப்பதாக நாம்தான் கற்பனை செய்கிறோம்.
நம் சரீரத்தை பாருங்கள். தலை,கைகள்,கால்கள்,உள்ளுறுப்புகள் என்று பல உள்ளன. ஆனால் கூர்ந்து சிந்தித்தால் இவை பல அல்ல. ஒரே வகையான அனந்தகோடி உயிரணுக்களின் கூட்டமைப்பு தான் நம் உடல் என்பது. ஒரே வகையான செல்களின் கூட்டால் தோன்றும் பலதான அமைப்புதான் நம் சரீரம். இங்கு அனைத்து செல்களும் ஒன்றோடு ஒன்று இணைந்து ஒரு உருவத்தை உண்டாகுவதால், நாம் "ஒரே சரீரமாகதான்" கருதுகிறோம்.

அவ்வாறே, எண்ணற்ற கோள்களும், நட்சத்ரங்களும், விண்கற்களும், எத்தனை எத்தனையோ சூரிய சந்திரர்களும், அசையும் அசையாதவைகளும், இன்னும் என்னெனவோ பொருட்கள் ஒன்று சேர்ந்து இருக்கும் வடிவம் தான் பிரபஞ்சம் அல்லது ப்ரஹ்மம் என்று கூறப்படுவது. இருக்கும் அனைத்துமே ஒன்றோடு ஒன்று ஈர்புவிசை, உஷ்ணம், சீதளம், வெளி, காற்று, ஆகாயம், சூனியம் முதளியவையால் இணைக்கப்பட்டே உள்ளன. ஒன்றேயான இப்பிரபஞ்சத்தை பலதாக பாவிப்பது மாயையாகும்.
அவ்வாறே பிரம்மத்தைதவிர வேறு அல்லாததை, பிரம்மத்தை உலகமாக நாம் பாவிப்பது, கற்பனை செய்வது மாயை. பிரம்மத்தில் உலகம் என்பது நம் கற்பனை. உலகம் நம் கற்பனை. ஆகவே உலகம் மாயை!!!

Tuesday, 30 August 2016

போகரும்_சிலையும்

"இறைசக்திக்கு முன்பாக நவீன அறிவியல் தொழில் நுட்பங்கள்
செல்லுபடியாகவில்லை!"

பழனியாண்டவர் சிலையை உருவாக்க போகர் பயன்படுத்தியது நவபாஷாணங்கள்.

வீரம், பூரம், ரஸம், ஜாதிலிங்கம், கந்தகம், கௌரிபாஷாணம்,
வெள்ளை பாஷாணம், மிருதார்சிங்,
சிலாஹித் ஆகியவைதான் அந்த ஒன்பது பொருட்கள். இவைதான் பிரதானம்.

இது போக மேலும் பல வஸ்துக்களையும், மூலிகைகளையும் கலந்து
திரவ நிலைக் குழம்பைக் கெட்டிப்படுத்தி திடப்பொருளாக மாற்றும் வித்தை போகருக்குத் தெரிந்திருந்தது.

போகரின் தலைமையில் 81 சித்தர்கள் ஒன்று சேர்ந்து, 81 வகையான வஸ்துக்களைக் கலந்து 9 கலவைகளாக்கிய பிறகு இந்தப் பாஷாணக்கட்டு செய்யப்பட்டது.

இந்தக் கலவைகளை 9 விதமான
எரிபொருளைக் கொண்டு காய்ச்சி,
81 முறை வடிகட்டி சுத்தி செய்யப்பட்டதாக அவரது பாடல்களில் சொல்லப்பட்டுள்ளது.

அந்த பாஷாணக் கலவையில் லிங்கம்,செந்தூரம், பாதரசம், ரச கற்பூரம், வெடி உப்பு, பாறையுப்பு, சவுட்டுப்பு, வாலையுப்பு,
எருக்கம்பால், கள்ளிப்பால், வெண்காரம், சங்குப்பொடி, கல்நார், பூநீர், கந்தகம், சிப்பி, பவளம், சுண்ணாம்பு, சாம்பிராணி,
இரும்பு, வெள்ளீயம், அரிதாரம், குன்றிமணி போன்ற பல சாமான்களும் பயன்படுத்தப்பட்டன.

இந்த வகை பாஷாணங்களைக் கலந்து கலவையாகக் கட்டும் வரை அதைச் செய்பவர்கள் சுவாசிக்கக் கூடாது! ஏனெனில் அவை
அத்தனையும் கொடிய விஷத்தன்மையானவை.

அத்தனை பேரும் மூச்சை உள்ளடக்கி சில மணி நாழிகைகள் வரை சுவாசிக்காமல் இவ்வளவு பெரிய பணியை போகரின் வழிகாட்டுதல் மூலம் செவ்வனே செய்து முடித்தார்கள் என்பதை
இப்போது நினைத்துப் பார்த்தாலும் மலைப்பாகவே இருக்கிறது.

அத்தனை பேரும் எந்த அளவுக்குச்
சித்தி பெற்று பிராணாயாமத்தைக்
கடைப்பிடித்திருந்தால் இப்படியொரு அசாத்தியமான மூச்சையடக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும்!

பாஷாணங்களை வைத்துக் கட்டப்பட்ட இந்தச் சிலை உஷ்ணத்தை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கும்.

அதனால் போகர் எழுதி வைத்துப் பின்பற்றி வந்த ஆறு கால பூஜைகளையும், செய்விக்க
வேண்டிய அபிஷேகங்களையும் இன்று வரை மாற்றாமல் கடைப்பிடித்து வருகிறார்கள்.

இரவுகால பூஜைக்குப் பின் விக்கிரகத்திருமேனியில் அரைத்த சந்தனத்தைப் பூசிக் குளிர்வித்து விடுகிறார்கள்.

மறுநாள் காலை விளாப் பூஜை நடக்கும் வரை, ஏறத்தாழ 10 மணி நேரங்களுக்கு எந்த அபிஷேகமும்
இல்லாதபோது விக்கிரகம் வெளிப்படுத்தும் உஷ்ணத்தை உறிஞ்சி விக்கிரகத் திருமேனியைக்
குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள இந்தச் சந்தனக் காப்பு உதவுகிறது.

சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு பழனியாண்டவர் விக்கிரகத்தின் ஸ்திரத் தன்மையை அறியவும், அந்தச் சந்தனத்தில் என்னென்ன ரசாயனங்கள் தங்கியுள்ளன என்பதைக் கண்டறியவும் தமிழக கனிம வளக் கழகத்தின் அப்போதைய தலைவர் தலைமையில் விஞ்ஞானிகள் குழு ஒரு சோதனையை மேற்கொண்டது.

முதல் சந்தனத்தைக் கரைசலாக்கி அதை அட்டாமிக் அப்சார்ப்ஷன்
ஸ்பெக்ட்ரோமீட்டர் என்ற கருவி மூலம் பரிசோதனை செய்தனர்.

மற்ற நேரங்களில் செய்விக்கப்பட்ட அபிஷேகப் பொருள்களில் என்னென்ன ரசாயனங்கள் தங்கின என்பதை இந்தக் கருவி மூலம்
துல்லியமாகக் கண்டறிந்தனர்.
ஆனால் இரவுக்காலப் பூஜைக்குப் பின் சாற்றிய சந்தனத்தில் என்ன இருந்தது என்பதைப் பலமுறை,
பரிசோதித்தும் கண்டறிய முடியவில்லை!

அதாவது அந்தக் கரைசலின் மூலத்துகள்களை இன்னவென்று பகுத்தறிய முடியாமல் போனது
எப்படி என்பது அக்குழுவினருக்கு மிகுந்த ஆச்சரியம்தான்!

இறைசக்திக்கு முன்பாக நவீன அறிவியல் தொழில் நுட்பங்கள் செல்லுபடியாகவில்லை என்பது இதில் நிரூபணமானது!

Monday, 8 August 2016

நட்சத்தித்திற்கேற்ற ருத்ராஷம்

1. அஸ்வினி - ஒன்பது முகம்.

2. பரணி - ஆறுமுகம், பதிமூன்று முகம்.

3. கார்த்திகை - பனிரெண்டு முகம்.

4. ரோஹிணி - இரண்டு முகம்.

5. மிருகசீரிஷம் - மூன்று முகம்.

6. திருவாதிரை - எட்டு முகம்.

7. புனர்பூசம் - ஐந்து முகம்.

8. பூசம் - ஏழு முகம்.

9. ஆயில்யம் - நான்கு முகம்.

10. மகம் - ஒன்பது முகம்.

11. பூரம் - ஆறுமுகம், பதிமூன்று முகம்.

12. உத்திரம் - பனிரெண்டு முகம்

13. ஹஸ்தம் - இரண்டு முகம்.

14. சித்திரை - மூன்று முகம்.

15. ஸ்வாதி - எட்டு முகம்.

16. விசாகம் - ஐந்து முகம்.

17. அனுஷம் - ஏழு முகம்.

18. கேட்டை - நான்கு முகம்.

19. மூலம் - ஒன்பது முகம்.

20. பூராடம் - ஆறுமுகம். பதிமூன்று முகம்.

21. உத்திராடம் - பனிரெண்டு முகம்.

22. திருவோணம் - இரண்டு முகம்.

23. அவிட்டம் - மூன்று முகம்.

24. சதயம் - எட்டு முகம்.

25. பூரட்டாதி - ஐந்து முகம்.

26. உத்திரட்டாதி - ஏழு முகம்.

27. ரேவதி - நான்கு முகம்.

Monday, 1 August 2016

செல்வ செழிப்புடன் வாழ சித்தர்கள் காட்டிய வழிமுறை

இலக்குமி தோத்திரம்:-

அகத்திய முனிவர் தம்முடைய மனைவியோடு கொல்லாபுரம் என்னும் ஊருக்குச் சென்றார். கொல்லாபுரத்தில் உள்ள திருமகள் திருக்கோவிலிற்கு சென்று இங்கு குடிகொணடிருக்கும் திருமகளை போற்றி பின்வரும் பாடலைப் பாடினார்.

திருமகளும் மனமகிழ்ந்து அகத்திய மகரிசியிற்கு காட்சி கொடுத்து “அகத்திய மகரிசியே தங்களின் போற்றிப் பாடலிற்கு நான் மிகவும் மனமகிழ்ந்தேன். இப் பாடலை யாரொருவர் உள்ளத்தூய்மையோடு பாடி போற்றுகிறாரோ அவர் அரிய பெரிய இன்பங்களை நுகர்வார். இப் பாடல்கள் எழுதப் பெற்ற ஏடானது இல்லத்திலே இருக்குமானால் வறுமையைக் கொடுக்கின்ற தவ்வையானவள் அவ்வில்லத்தை அடைய மாட்டாள்.” என்று திருவாய் மலர்ந்தருளினாரகள். இப் பாடல்களை நாள்தோறும் படிப்பவர்கள் வறுமை நீங்கி செல்வத்தையடைந்து அச் செல்வத்தினாலான பயனையும் நுகர்வர் இது நடைமுறையில் கண்டறிந்த உண்மை. இந் நூல் வீட்டிலிருக்குமானால் செல்வ நலம் சிறந்தோங்கும்.

1

மூவுலகம் இடரியற்றும் அடலவுணர்
உயிரொழிய முனிவு கூர்ந்த
பூவைஉறழ் திருமேனி அருட்கடவுள்
அகன்மார்பில் பொலிந்து தோன்றித்
தேவர்உல கினும்விளங்கும் புகழ்க்கொல்லா
புரத்தினிது சேர்ந்து வைகும்
பாவைஇரு தாள்தொழுது பழமறைதேர்
குறுமுனிவன் பழிச்சு கின்றான்

மூன்று உலகங்களுக்கும் துன்பத்தை விளைவிக்கின்ற வலிமை பொருந்திய அசுரர்களுடைய உயிரை ஒழிக்கின்றதும், பூவையொத்த மென்மையான, அழகிய உடலை கொண்ட அருட் கடவுளான திருமாலின் மார்பில் தோன்றிய தாயே, தேவர் உலகத்திலும் சிறப்பான புகழ்மிக்க கொல்லாபுரம் ஊரில் சேர்ந்து இனிதாக வீற்றிருக்கும் பாவையாகிய திருமகளின் இரண்டு திரு அடிகளையும் வணங்கி, பழைமையான சாத்திரங்களையெல்லாம் ஆராய்ந்து குரு முனிவரான அகத்திய முனிவர் பாடுகின்றார்.

2

கொழுதியிசை அளிமுரலும் தாமரைமென் பொகுட்டி லுறை கொள்கைபோல
மழையுறழுந் திருமேனி மணிவண்ணன்
இதயமலர் வைகு மானே
முழுதுலகும் இனிதீன்ற அருட்கொம்பே
கரகமலம் முகிழ்த்தெந் நாளுங்
கழிபெருங்கா தலில்தொழுவோர் வினைதீர
அருள்கொழிக்குங் கமலக் கண்ணாய்.

தேனிற்காக வரும் வண்டினம் பண்களை பாடுவதற்கு இடமாக இருக்கும் தாமரை மலரின் கொட்டையில் உறைகின்ற தத்துவம் போன்ற மழை நீர் நிரம்பிய கருமுகிலினை ஒத்த நிறத்தினையுடைய திருவுடம்பினையுடைய மணிவண்ணனாகிய திருமாலின் உள்ளமாகிய தாமரை மலரில் வாழுகின்ற மான் போன்ற அருட்பார்வை கொண்ட திருமகளே. உலகம் முழுவதும் உனது அருளினால் தீன்றிய அருட்கொடியே. என்னாளும் உனை மறவாது தாமரை மலர் போல் இரு காரமும் குவித்து உன்னை மிகுந்த காதலோடு அதாவது மிகுந்த அன்போடு வணங்குபவர்களின் தீவினை தீர்த்து அருள் பொழியும் தாமரை மலர் போன்ற கண்களை உடையவளே!

3

கமலைதிரு மறுமார்பன் மனைக்கிழத்தி
செழுங்கமலக் கையாய் செய்ய
விமலைபசுங் கழைகுழைக்கும் வேனிலான்
தனையீன்ற விந்தை தூய
அமுதகும்ப மலர்க்கரத்தாய் பாற்கடலுள்
அவதரித்தோய் அன்பர் நெஞ்சத்
திமிரமகன் றிடவொளிருஞ் செழுஞ்சுடரே
எனவணக்கஞ் செய்வான் மன்னோ.

தாமரை மலர் போன்ற கண்ணுடைய திருமகளே. அழகிய மறுவமைந்த மார்பினை உடைய திருமாலின் இல்லத்தரசியே. செழுமை நிறைந்த தாமரை மலரினை ஒத்த கையினை உடையவளே, செந்நிறமான விமலையே, பசுமையான கரும்பினை வில்லாக வளைக்கும் வேனிற் காலத்திற்குரியவனான காமனைப் பெற்றவளே, தூய்மையான அமுதகலசத்தை ஏந்திய பூ போன்ற மென்மையான கையினை உடையவளே, பாற்கடலில் பிறந்தவளே, அன்பர்கள் மனதில் இருக்கும் இருளை அகற்றி ஒளிரச் செய்யும் செழுமையான பேரொளியே என்று போற்றி வணக்கிறேன்.

4
மடற்கமல நறும்பொ குட்டில் அரசிருக்கும்
செந்துவர்வாய் மயிலே மற்றுன்
கடைக்கணருள் படைத்தன்றோ மணிவண்ணன்
உலகமெலாம் காவல் பூண்டான்
படைத்தனன்நான் முகக்கிழவன் பசுங்குழவி
மதிபுனைந்த பரமன் தானும்
துடைத்தனன்நின் பெருஞ் சீர்த்தி எம்மனோரால் எடுத்துச் சொல்லற் மாற்றோ.

அழகிய இதழ்களையுடைய நல்ல மணமுள்ள தாமரை பூக் கொட்டையில் அரசாயிருக்கும் நற்பவளம் போன்ற சிவந்த அதரங்களை உடைய மயில் போன்றவளே, மற்றும் உன் கடைக்கண் பாரரவை அருள் பெற்றல்லவா நீல மணி நிறத்தினையுடைய திருமால் உலகையெல்லாம் காக்கும் தொழிலை மேற்கொண்டார். நான்கு முகக்கடவுள் படைத்தல் தொழிலை செய்தார். பசுமையான பிறைச்சந்திரனை அணிந்த சிவபெருமானும் அழித்தற் தொழிலைச் செய்தார். நின் பெருங் கீர்த்தி என்னை போன்றோரால் எப்படி எடுத்துச் சொல்ல முடியும்

5
மல்லல்நெடும் புவியனைத்தும் பொதுநீக்கித்
தனிபுரக்கு மன்னர் தாமும்
கல்வியினில் பேரறிவில் கட்டழகில்
நிகரில்லாக் காட்சி யோரும்
வெல்படையில் பகைதுரந்து வெஞ்சமரில்
வாகைபுனை வீரர் தாமும்
அல்லிமலர்ப் பொகுட்டுறையும் அணியிழைநின்
அருள்நோக்கம் அடைந்துள்ளாரே.

வளம் பொருந்திய பரந்த பூமி முழுவதையும் பொதுவானவற்றிலிருந்து விலகி தனியே ஆட்சி செய்யும் அரசர்கள் தானும், கல்வியிலும், பெரிய அறிவிலும், மிகுந்த அழகிலும் சிறந்து விளங்குவோரும், வெல்லுகிற படையினால் பகைவர்களை துரத்தி கொடிய போரில் வெற்றி வாகை சூடும் வீரர்கள் தானும், தாமரை மலரின் அகவிதழாம் அல்லி வட்டத்தினுள் உள்ள கொட்டையின் தங்கியிருக்கின்ற அழகிய அணிகலன்களை அணிந்த திருமகளாம் தங்களின் திருஅருளைப் பெற்றவர்களே ஆவர்.

6
செங்கமலப் பொலந்தாதில் திகழ்ந்தொளிரும்
எழின்மேனித் திருவே வேலை
அங்கண்உல கிருள்துரக்கும் அலர்கதிராய்
வெண்மதியாய் அமரர்க் கூட்டும்
பொங்கழலாய் உலகளிக்கும் பூங்கொடியே
நெடுங்கானில் பொருப்பில் மண்ணில்
எங்குளைநீ அவணன்றோ மல்லல்வளம்
சிறந்தோங்கி இருப்ப தம்மா.

செந்தாமரை மலரின் பொன்னிறமான மகரந்தத்தை போல் சிறந்து ஒளிரும் அழகிய எழில் மேனியினளே திருமகளே, கடலால் சூழப்பட்ட இந்த உலகத்தின் இருளை விரட்டும் சூரியனாய், வெண்மையான சந்திரனாய், தேவர்களை மகிழ்விக்கும் பொங்கும் நெருப்பாய் நின்று உலகை காக்கும் பூங்கொடி ஆனவளே! நீண்ட காட்டில், மலையில், நிலத்தில் நீங்கள் எங்கு இருக்கிறீர்களோ அங்கு செல்வ வளம் சிறப்பாக ஓங்கி இருக்கிறதம்மா.

7
என்றுதமிழ்க் குறுமுனிவன் பன்னியொடும்
இருநிலத்தில் இறைஞ்சலோடும்
நன்றுனது துதிமகிழ்ந்தோம் நான்மறையோய்
இத்துதியை நவின்றோர் யாரும்
பொன்றலரும் பெரும்போகம் நுகர்ந்திடுவர்
ஈங்கிதனைப் பொறித்த ஏடு
மன்றல்மனை அகத்திருப்பின் வறுமைதருதவ்வை அவண் மருவல் செய்யாள்.

என்று திருமகளை புகழ்ந்து பாடிய தமிழிற்கு இலக்கணம் செய்த குறு முனியாகிய அகத்திய முனிவர் தனது மனைவியோடு நிலத்தில் வீழ்ந்து வணங்கலானார். அங்கு தோன்றிய திருமகளும் நான்கு வேதங்களையும் கற்றுணர்ந்த வல்லவனே நீ என்னை புகழ்ந்து பாடிய பாடலிற்கு நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். இப்பாடல்களை முறைப்படி படிப்பவர்கள் பெரிய இன்பத்தை அனுபவிப்பார்கள். என்னை புகழ்ந்த இந்த பாடல்கள் எழுதிய ஏடு யார் வீட்டில் இருக்கிறதோ அவர்கள் வீட்டிற்கு வறுமையைத் தரும் எனது தமக்கையானவள் வரமாட்டாள் என வரமளித்தார்கள்.இப்பாடல்கள் அதிவீரராம பாண்டியர் மொழிபெயர்த்த காசி காண்டத்தில் இடம் பெற்றுள்ளது.
பூசிக்கும் முறை:-
பூசை அறையில் பஞ்சமுக தீபமேற்றி வைத்து நறுமணம் தரக்கூடிய சாம்பிராணி தூபம் அல்லது பத்தி பொருத்தி வைத்து, முதலில் விக்கின வினாயகரை காரிய சித்தி வேண்டி வணங்க வேண்டும். பின்னர் அகத்திய மகரிசியிற்கு குரு வணக்கம் செலுத்த வேண்டும். அதன் பின்னர் மகாலட்சுமி தாயிற்கு மந்திர புட்ப, தூப தீப ஆராதனை செய்து வணங்க வேண்டும். பிறகு இப்பாடல்களை 3. 5, 9 முறை என படித்து தூப தீப நைவேத்திய ஆராதனை செய்து முடிக்க வேண்டும்.

அகத்திய மகரிசி காட்டிய வழியில் மகாலட்சுமி தாயை வணங்கி நாமும் வாழ்வில் சகல சௌபாக்கியங்களும் பெற்று சீரும் சிறப்புமாக வாழ்வோமாக.