கடுவெளிச்சித்தர் என்பவர் திண்டிவனம் ஆரோவில் அருகில் உள்ள இரும்பை கிராமத்தில், சிவனை எண்ணி தவம் செய்து கொண்டிருந்தார். அப்போது நாட்டில் சரியாக மழை பெய்யாமல் மக்கள் அனைவரும் வறுமையில் வாடினர். சித்தரின் தவத்தால் தான் நாட்டில் மழை பெய்யவில்லை என்று எண்ணிய மன்னன் ஒரு தேவதாசியின் மூலம் அவரது தவத்தைகலைக்க முயற்சித்தான். தவம் கலைந்து சித்தர், உண்மையை கேட்டு தவத்தை தொடராமல் சிவ பணி செய்ய தொடங்கினார். ஒரு முறை கோயில் விழாவில் சித்தரின் தவத்தை கலைத்த தாசியும் நடனம் அட, அச்சமயம் அவள்காலில் இருந்த சிலம்பு கீழே விழுவதை கண்ட சித்தர் - இதனால் விழாவிற்கு தடங்கள் வந்துவிடுமோ என்ற நல் எண்ணத்தில் சிலம்பை அவளதுகாலில் கட்டி விட்டார். இதை பார்த்து மக்கள் இவரை பற்றி தவறாக பேசி ஏளனம் செய்தனர். மனம் நொந்துபோன சித்தர், சிவனை நோக்கி பாட கோயிலில் இருந்த சிவலிங்கம் மூன்றாக வெடித்தது. தவறை உணர்ந்த் மக்களும் மன்னனும் மன்னிப்பு கேட்டார்கள். மீண்டும் சிவனை நோக்கிபாட, உடைந்த பாகங்கள் ஒன்று சேர்ந்தன.
No comments:
Post a Comment