Thursday, 31 December 2015

சித்தர்களும் சிவபெருமானும்

1. சித்தர்களுக்கும் சிவபெருமானுக்கும் என்ன தொடர்பு? அதாவது சிவன் இருக்கும் இடங்களில் அதிகம் சித்தர்கள் இருப்பபதன் காரணம் என்ன?
2. சாதாரணமாணவர் ஜீவ சமாதிக்கும் சித்தர்களின் ஜீவ சமாதிக்கும் என்ன வித்தியாசம்?

ஆன்மீகம் என்னும் கடலை கடக்க நினைக்கும் அணைத்து மனிதர்களுக்கும் மனதில் கட்டாயம் இந்த கேள்விகள் எழுந்தே தீரும்.

சித்தர்களுக்கும் சிவபெருமானுக்கும் என்ன தொடர்பு? அதாவது சிவன் இருக்கும் இடங்களில் அதிகம் சித்தர்கள் இருப்பபதன் காரணம் என்ன?

யோக சாஸ்திரத்தில் சிவன் என்பவன் கடவுள் அல்ல.... ஆதி சித்தன். அதாவது முதல் சித்தன். சித்தர்கள் வேதங்கள் ஓதுவதை காட்டிலும், தியானம், தவம், ஆத்மாவை அர்பணித்தல் போன்ற வழிகள் மூலமாக இறைவனை அடைய முடியும் என்பதை நிரூபித்தவர்கள். அவர்கள் இந்த முறைகளையே பின்பற்றினர். சித்தர்கள் சிவனை கடவுளாக பார்ப்பதை விட குருவாக தான் பார்கிறார்கள்.... குரு இருக்கும் இடத்தில தானே சிஷ்யர்களுக்கு வேலை. அதனால் தான் இந்த நிலை. 

கேள்வி 2:
சாதாரணமாணவர் ஜீவ சமாதிக்கும் சித்தர்களின் ஜீவ சமாதிக்கும் என்ன வித்தியாசம்? 

ஜீவசமாதி என்றால் ஜீவனை சமாதியாக்குவது என்று பொருள். ஜீவன் என்பது உயிர். சமாதி என்றால் கட்டிடம் என்றோ, புதைத்தவர்களின் மேல் எழுப்பப்படும் கட்டுமானம் என்றோ கருத வேண்டாம்..... சமாதி என்பது சம்+ஆதி என்று பொருள் படும். அதாவது மனம்+ஆதி. ஆத்மாவானது உடலை அடையும் போது எவ்வளவு தூய்மையாக இருந்ததோ அதே தூய்மையை மீண்டும் பெற்று உன்னத நிலையை அடைவது என்று பொருள். ஒவ்வொருவரும் பிறக்கும் போது தூய்மையான அத்மாவாகதான் பிறக்கிறோம். ஆனால் வளரும் போது, காலம் செல்ல, உலகம் என்னும் மாயையில் சிக்கி பல பாவங்களை செய்கிறோம், ஒவ்வொரு நாளும் பாவத்தின் கணக்கை கூட்டி ஆத்மாவனத்தை அசுத்தம் செய்கிறோம். 

ஆக ஜீவசமாதி என்பது உயிர் என்ற ஆத்மாவானது, ஒரு உடலை தேர்ந்தெடுத்து அதில் சஞ்சரிக்கும் போது, எவ்வளவு தூய்மையாக இருந்ததோ, அதே தூய்மையான நிலையை மீண்டும் அடைந்து பரமாத்வாவிடம் ஒருங்கிணைவது என்று அர்த்தம். இதை செய்வது என்பது சாதாரண விஷயம் அல்ல. தியானம், தவம், கடுமையான விரதங்கள், என கடுமையான மனநிலைகளை கடந்து தான் இந்த ஜீவ சமாதியை நம்மால் அடையமுடியும்.

ஒருவர் ஜீவசமாதி ஆகும் போது அவரின் உடல் அழுகுவது இல்லை. மாறாக ஜீவனற்ற அந்த உடல் சுருங்கி, வற்றி போகும். கெட்டு போகாது இது எப்படி என்ற கேள்வி வரலாம்...... விடை காயகல்ப்பம். காயகல்ப்பம் என்பது இரண்டு வகைப்படும் ஒன்று நாம் உட்கொள்ளுவது அதாவது மூலிகை தயாரிப்பு. மற்றொன்று சுவாச பயிற்சி. இங்கே ஜீவசம்மதி அடைபவர்கள் இரண்டாவது வகை காயகல்பத்தில் தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பார்கள். இந்த சுவாச பயிற்சியின் படி, ஒருவர் மூச்சை அடக்கி, மூச்சு விடாமல் உயிர் வாழ முடியும். இதய செயல்பாடு, மூளை செயல்பாடு, மன ஓட்டங்கள் என அனைத்தையும் நிறுத்திவைத்து ஆன்மாவை மட்டும் விழித்திருக்க செய்வார்கள். உடலில் ஆன்மா இருக்கும் ஆனால் மூளை செயல்பாடு, இதயத்துடிப்பு இல்லாமல் போவதால், உயிரற்ற உடலை போல் தெரியும். இவ்வாறு ஜீவசமாதி ஆகும் மகான்கள் தங்கள் உடலை விட்டு பஞ்சபூத நிலைகளில் எந்த நிலையில் வேண்டுமானாலும் தங்களின் ஆத்மாவை உருவகம் செய்துகொள்ள முடியும் என்று அகத்தியர் கூறுகிறார். 

பொதுவாக ஜீவசமாதி அடைபவர்கள் உலக நன்மைக்காக வேண்டியே அதை செய்வார்கள். அப்படி செய்யும்போது அந்த எண்ணங்கள் அவர்கள் உடலோடு ஒன்றி இருக்கும். அந்த எண்ணங்களின் அதிர்வுகள் (vibrations) அந்த ஜீவசமாதியின் மீது இருக்கும் கட்டுமானங்களில் எதிரொலித்து கொண்டே இருக்கும். நாம் அவற்றை வலம்வரும் போது, அந்த அதிர்வுகலானது நம் மனதையும் தாக்கி, அதை தூய்மை செய்து, நல்ல சிந்தனைகளை நம் மனதிற்குள் விதைத்துவிடும் ......... பல மகான்கள் ஜீவசமாதியை தேர்ந்தெடுக்க இதுவே முக்கிய காரணம். 

மறுபுறம் சாதாரண மனிதர்களின் சமாதி என்பது இப்படி இல்லை. அவர்களின் உடல் அழுகிவிடும். எந்த ஒரு அதிர்வுகளும் இருக்காது. ஏனென்றால் அவர்களுக்கு இந்த சூட்சமங்கள் தெரியாது. தெரிந்தவர்கள் மகான்கள் ஆகிறார்கள். சூட்சமத்தை பயன்படுத்தி ஜீவசமாதி அடைகிறார்கள்....

Monday, 28 December 2015

மந்திர ஜெபம் செய்யும்போது

உருத்திராட்சம்

உருத்திராட்சம் பயன்படுத்தி மந்திரம் சொல்லும்போது குறிப்பிட்ட விசயம் ஜெயம் பெறுவதற்காக இவற்றை பயன்படுத்தலாம்.

ஒரு முகம் - காரிய  சித்தி

இருமுகம் - லட்சுமி கடாட்சம்

மும்முகம் -சகல சித்தி

நான்கு முகம்- அறம், வீடு நல்கும்

ஐந்து - பாவத்தை போக்கும்

உருத்திராட்சத்தின் அளவு

இலந்தையளவு - சுக சௌபக்கியம்

நெல்லியளவு - துக்க நிவாரணம்

கடலை அளவு- சகல சித்தி. பலன் வரையறுக்கு முடியாது

தானமாக உருதிராடசம் வாங்கக் கூடாது. சிறிய மணி விசேசம்

உருத்திராடசத்துடன்

பொன்மணி சேர்த்தால் செல்வம்

முத்து சேர்த்தால்  புகழ்

ஸ்படிகம் சேர்த்தால் சந்தான விருத்தி

பவளம்  - வசியகாமி

வெள்ளி - வாகனகாமி

மந்திரம் சொல்ல ஏற்ற மணிகள்

சிவன் - உருத்திராட்சம்

விஷ்ணு- முத்து

ஸ்படிகம் - சூரியன்

பவளம் - சண்டிகை

தாமிரமணி- ஐய்யப்பன்

மந்திர ஜெபம் சொல்லும்போது கணக்கிட,

விரல்ரேகை - எட்டு பங்கு அதிகம்

பவளம் - ஆயிரம் மடங்கு

ஸ்படிகமணி- பத்தாயிரம் மடங்கு

முத்துமணி -இலட்சம் மடங்கு

தாமிரமணி - 10 லட்சம் மடங்கு

பொன்மணி - கோடி மடங்கு

உருத்திராட்சம் , தர்ப்பை முடி - கணக்கிட முடியாத பலன் தரும்.

கையில் வைத்திருக்கும் மந்திர மாலையின் மணிகளுக்கு எவ்வளவு விசேசம் என்று தெரிந்தது அல்லவா. இனி இவற்றை கையில் வைத்து மந்திரம் சொல்லும்போது தேவையற்ற வார்த்தைகளை பயன்படுத்துவதும் தவறான விளைவை தரும் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

ஜெப மாலையில் மணிகளின் எண்ணிக்கை

30 மணி - ஐஸ்வர்யம்

27 மணி- சக்தி

25 மணி - முக்தி

15 மணி - மந்திர சித்தி

கிழக்கு பார்த்து சொன்னால் வசியம்

மேற்கு பார்த்து சொன்னால் - தனம்

மணியை உருட்ட

பெருவிரல் - முக்தி

சுட்டு விரல் - சத்துரு நாசம்

மத்திம விரல் - பொருள்

மோதிர விரல் - சாந்தி

கனிஷ்ட விரல் - யாவும் உண்டாகும்.

நம்மை பார்த்து உள் பக்கமாக மணியை உருட்டினால் நமக்கான மந்தர பலிதம்.

மற்றவர்கெனில் வெளிபக்கமாக உருட்டவேண்டும்.

Tuesday, 22 December 2015

மரணத்திற்குப் பிறகு

மரணத்திற்குப் பிறகு மூன்று நாட்கள் இருப்பது ஏன் ? அதாவது இந்த தனஞ்செயனானது இடகலை, பிங்கலை, சிகுவை, அத்தி, அலம்புடை, புருடன், காந்தாரி, சங்கிணி, குரு ஆகிய ஒன்பது நாடிகளிலும் பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன், நாகன், கூர்மன், கிருகன், தேவதத்தன் என்கிற ஒன்பது பிராணன்களுடன் கூடிஇருக்கும். அப்படி கூடி இருக்கும் வரைதான் உயிர் இருக்கும். இது பிரிந்து செயல்படும் இடத்தை நாற்சந்தி என்பார்கள். வயிரவன், முக்கியன், அந்தர்யாமி, பிரவஞ்சனன் என்ற இந்த நாற்சந்திகளில் அந்தர்யாமி பிராணவாயுவை உடலினுள்ளேயும், இரத்தத்தினுள்ளேயும் உருவாக்கிக் கொண்டே இருப்பதால்தான் இந்த தனஞ்செயன் வாயுவானது உடலில் தங்கிவிடுகிறது. இதைப் பயன்படுத்தி சித்தர்கள் இறந்ததாகக் கருதப்படும் உடலில் பிராணவாயுவை அதிகரிக்கச் செய்து உயிர் பெற்று ஏழ வைத்துவிடுவார்கள். இதனால்தான் இறந்தவர்களை புதைக்கச் சொல்கிறார்கள்.

சாதாரணமான மனிதர்களுக்கு புதைத்த உடலில் இருந்து எவ்வித துன்பமும் இல்லாமல் தனஞ்செயன் வெளியறிவிடும். ஆனால் எரியூட்டப்படும் உடலில் இருந்து தனஞ்செயன் வேதனையுடனும் வலியுடனும் டப் என்ற சத்தத்துடன் மண்டையை உடைத்துக் கொண்டு வெளியேறும். மேலும் ஞானிகளின் சமாதி நிலையை மரணம் என்று எண்ணி அவர்கள் தேகத்தை எரித்துவிடக் கூடும், என்று கருதியே வள்ளலார் எரியூட்டுவதைக் கடுமையாக எதிர்த்தார். எரிப்பது என்பது கொலைக்குச் சமம் என்கிறார். வேலூருக்கருகே வள்ளிமலை கோவிலில் திருப்பணி வேலைகள் நடந்து கொண்டிருந்த போது, உடைந்திருந்த படிக்கல்லை எடுத்து விட்டு, புதுப் படிக்கல் போடுவதற்காக உடைந்த படிக்கல்லை நகர்த்திய போது, உள்ளே சித்தர் ஒருவரின் அமர்ந்த திருக்கோலத்தைத் தான் கண்டதாக திரு முருக கிருபானந்த வாரியார் சொல்லியிருக்கிறார். யோகியர் தேகத்தை மண்கூடத் தீண்டாது. கேசரி, லம்பிகா யோகத்தில் அப்படி அமர்ந்திருப்பவர்களை விபரம் தெரிந்தவர்கள் எழுப்பி விடமுடியும். அந்த இடத்தில் இது குறித்த விபரம் தெரிந்தவர்கள் யாரும் இல்லையெனில் மீண்டும் புதைத்து விடுவார்கள். அப்படி லம்பிகா யோகத்தில் அமர்ந்திருப்பவர்கள் இறந்தவர்கள் போலத்தான் காணப்படுவார்கள். அவர்கள் உடல் எத்தனை யுகங்களானாலும் பூச்சிகள் மற்றும் இயற்கை சீற்றங்களால் அன்றி வேறெதாலும் அழியாமல் அப்படியே இருக்கும். அவர்கள் வாயை பக்குவமாகத் திறந்து உள்ளே உள்நாக்குப் பகுதியை அடைத்திருக்கும் நாக்கை மெதுவாக எடுத்துவிட்டு, மெதுவாக கைகால்களை நீட்டி படுக்க வைத்து, மிகவும் மெதுவாக கை கால்களைத் தேய்த்து இரத்த ஓட்டம் வரச் செய்தோமானால், அவர்களுக்கு மூச்சு வந்துவிடும். ஆனால் கண்களைத் திறந்து நம் மீது கோபித்துக் கொள்ளவும் கூடும்.

Monday, 21 December 2015

பரமாச்சாரியார் 

பாம்பன் சுவாமிகள்

பாம்பன் என்னும் ஊரில் பாம்பன் சுவாமிகள் பிறந்தார். அடிகளாரது தந்தையார் சாத்தப்ப பிள்ளை, தாயார் செங்கமல அம்மையார். அடிகளாரது பிள்ளை திருநாமம் அப்பாவு. சுவாமிகள் பிறந்த ஆண்டு உறுதியாக அறியப்படவில்லை. 1850 முதல் 1852 ஆண்டுக்குள் இருக்கலாம் என நம்பப்படுகிறது.

அடிகளார் சிறு வயதிலேயே தமிழ் மொழியில் மிகுந்த ஞானத்துடன் விளங்கினார். திருமுருகன்பால் மிகுந்த பக்தி கொண்டார். கந்த சஷ்டி கவசத்தை எழுதிய தேவராய சுவாமிகள் போல் தாமும் முருகன் பால் தமிழில் கவி பாட வேண்டும் என வேட்கை கொண்டார். ஒவ்வொரு பாடலின் முடிவிலும் அருணகிரிநாதரின் பெயரை வைத்தே முடிக்க வேண்டும் என முடிவு செய்தார். முதன் முதலாக முருகனை போற்றி "கங்கையை சடையிற் பரித்து" என தொடங்கும் பாடலை இயற்றினார். தினமும் உண்பதற்கு முன் ஒரு பாடல் வீதமாக நூறு பாடல்கள் இயற்ற வேண்டும் என்ற நியதியை மேற்கொண்டார். அவ்வாறே நூறு பாடல்களை இயற்றினார். பின்னர் சேது மாதவ ஐயர் என்பவரிடம் சடக்ஷர மந்திர உபதேசம் பெற்றார். 

சுவாமிகள் திருமண பருவம் அடைந்தும் சேது மாதவ ஐயரின் வற்புறுத்தலின் பேரில் 1872ஆம் ஆண்டு காளிமுத்தம்மையார் என்பவரை மணம் புரிந்தார். மூன்று ஆண்டுகள் கழிந்தன. முருகாண்டியாபிள்ளை, சிவஞானாம்பாள், குமரகுருதாச பிள்ளை என்று மூன்று குழந்தைகள் பிறந்தனர். சிவஞானாம்பாளுக்கு ஒராண்டு நிரம்பிய போது ஒரு நாள் நள்ளிரவில் ஓயாது அழுது கொண்டே இருந்தது. அம்மையார் சுவாமிகளிடம் குழந்தை அழுவதை கூறி திருநீறளிக்குமாறு வேண்டினார். சுவாமிகள் இப்பொழுது எவருக்கும் திருநீறு அளிப்பதில்லை என்றும், முருகனிடம் வேண்டுமாறும் கூறினார். அவ்வாறே அம்மையார் முருகனிடம் வேண்டி குழந்தையின் அருகில் படுத்தார். அப்போது, காவி உடை உடுத்திய ஒருவர் அங்கு வந்து குழந்தையை அம்மையாரிடம் வாங்கி திருநீறு பூசி குழந்தை இனி அழாது என கூறி தாயிடம் தந்து விட்டு மறைந்தருளினார். அம்மையார் நடந்தவற்றை சுவாமிகளிடம் கூறினார். சுவாமிகள் முருகனின் திருவருளை நினைத்து வியந்தார். சுவாமிகளின் பெருமையை உணர்ந்து பல அடியார்கள் சீடர்கள் ஆயினர். இந்நிலையில், சுவாமிகளின் தந்தையார் சிவபதம் அடைந்தார். சுவாமிகள் துறவறம் மேற்கொள்ளும் எண்ணத்தில் இருந்தார். ஒரு சமயம் அங்கமுத்துப்பிள்ளை என்பவரிடம் தாம் பழனி செல்ல இருப்பதாக சுவாமிகள் கூறினார். அங்கமுத்துப்பிள்ளை தற்போது செல்ல வேண்டாம் என சுவாமிகளிடம் கூறினார். அதற்கு சுவாமிகள், இது முருகப்பெருமான் ஆணை என பொய் பகன்றார். அன்று மாலை, சுவாமிகள் வீட்டின் மாடியில் அமர்ந்திருந்தார். அப்பொழுது, சுவாமிகள் கண்களுக்கு தென் திசையில் இறை உருவம் தென்பட்டது. அந்த உருவம் அச்சுறுத்தும் வகையில் பயங்கரமாக இருந்தது. "எனது கட்டளை என பொய் கூறினாயே, இது முறையாகுமா?" எனக்கூறி அச்சுறுத்தியது. சுவாமிகள், இறைவனது சினத்தை கண்டு அஞ்சி, "தம் தவறுக்கு மன்னித்தருளுமாறு" வேண்டினார். அதற்கு, இறைவன், "இனி பழனிக்கு வரக்கூடாது" என உறுதி அளிக்குமாறு கூறினார். சுவாமிகளும் அவ்வாறே உறுதி அளித்ததும் அந்த உருவம் மறைந்து போனது. ஒரு பொய் கூறிய காரணத்தினால் சுவாமிகள் இறுதி வரை பழனி செல்ல முடியாமல் போனது. 

   அடிகளார் முருகப்பெருமானை நேரில் கண்டு உபதேசம் பெற வேண்டும் என பேராவல் கொண்டார். 1894ம் ஆண்டு பிரப்பன்வலசை எனும் ஊரை அடைந்தார். அங்கு உள்ள மயான பூமியில் தமது சீடர்களின் உதவியால் ஒரு சதுரக் குழி வெட்ட செய்தார். அதை சுற்றி முள் வேலி, கொட்டகை அமைக்கச் செய்தார். அக்கொட்டகையின் உள் ஒரு கை செல்லுமாறு சிறிய சந்து அமைக்க செய்து, நாள் தோறும் ஒரு வேளை உப்பிலாத அன்னம் வைக்குமாறு சீடர்களுக்கு கூறினார். வைத்த உணவை தாம் எடுக்கவில்லையானால் அது முதல் வைக்க வேண்டாம் என கட்டளையிட்டார். பின்னர் அக்குழியில் அமர்ந்து தியான யோகத்தில் ஈடுபட்டார். எழாவது நாள் இரவில் இரு முனிவர்களுடன், முருகப்பெருமான் இளைய அடிகளார் உருவில் காட்சி அளித்தார். அவரிடம் ஒரு ரகசியமான சொல்லை உபதேசித்து விட்டு, அம்முனிவர்களுடன் மேற்கு திசை நோக்கி சென்று மறைந்து போனார். அச்சொல்லை சிந்தித்த வண்ணம் முப்பது நாள் தவ யோகத்தில் இருந்தார். முப்பத்தைந்தாம் நாள், "தவத்திலிருந்து எழுக" என்ற ஒலி கேட்டது. "முருகன் கூறினால் மட்டுமே எழுவேன்" என சுவாமிகள் கூறினார். "முருகன் கட்டளை! எழுக" என்று பதில் வந்தது. சுவாமிகள், அவ்விடத்தை வணங்கி விட்டு அங்கிருந்து நீங்கினார். பின் பாம்பன் வந்து சேர்ந்தார். 
      1918ம் ஆண்டு தமக்கு ஏற்பட்ட வெப்பு நோய் விலகும் பொருட்டு குமாரஸ்தவம் எனும் அர்ச்சனை நூலை சுவாமிகள் இயற்றினார். அந்நோயும் நீங்கியது. சுவாமிகள் திருப்புகழ் பாடிய அருணகிரிநாதர் சுவாமிகட்கு குரு பூஜை நடத்தப்படாமை குறித்து வருந்தினார். தியான யோகத்தில் அமர்ந்து, அருணகிரிநாதர் முக்தி பெற்ற தினம் உத்தராயணம் கழிந்த ஆறாவது பௌர்ணமி என்று உணர்ந்தார். தமது சீடர்களுக்கு இது குறித்து அறிவித்து குரு பூஜை நடைபெறுமாறு செய்தார். 

 1923ம் ஆண்டு டிசம்பர் 27ம் நாள், சுவாமிகள் சென்னை தம்பு செட்டி தெரு வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, ஒரு குதிரை வண்டியின் சக்கரம் அடிகளாரது இடது கணை காலின் மீது ஏற, கால் முறிவடைந்தது. அங்கிருந்த அன்பர்கள் சுவாமிகளை சென்னை பெரிய மருத்துவமனையில் சேர்த்தனர். தலைமை மருத்துவரான ஆங்கிலேயர், சுவாமிகளின் கால் குணப்படாது என்று கூறினார். அது கேட்ட அன்பர்கள் மிகவும் வருந்தினர்.  பதினோராவது நாள் இரவு அடிகளார், படுக்கையில் படுத்த வண்ணம் முருகனை வேண்டினார். அப்போது முருகனின் வாகனமாகிய மயில்கள் வானத்தில் நடனம் புரிந்து வருவதை கண்டார். அப்பொழுது, முருகன் மயில்கள் மீது அமர்ந்து வரும் அரிய மயூரவாகன சேவனக்காட்சியை சுவாமிகள் கண்டு களித்தார். மறுநாள் இரவு அடிகளார் அருகில் முருகன் குழந்தை உருவில் படுத்திருப்பதை கண்டார். "முருகா" என்று அழைத்தவுடன் இறைவன் மறைந்து போனார். முருகனின் திருநாமத்தை பன்னிரு முறை கூறி வணங்கினார். உடனே கால் கூடி விட்டது. பெரிய மருத்துவரான ஆங்கிலேயர், இவரை சோதித்து இது தெய்வச் செயல் என்று அறிந்து அடிகளாரை வணங்கினார். இரு வாரங்களில் சுவாமிகள் முழுமையாக குணமடைந்து புதுப்பாக்கத்தில் உள்ள அன்பர் ஒருவர் வீட்டில் தங்கினார். பின் சுவாமிகளின் வேண்டுகோளின்படி, அடியார்கள் ஒவ்வொரு ஆண்டும் மயூர வாகன சேவன விழாவை நடத்தி வருகின்றார்கள். 

  தாம் முக்தி அடையும் காலம் வந்துவிட்டதை உணர்ந்த சுவாமிகள், தமது சீடர்களிடம் திருவான்மியூரில் நிலம் வாங்குமாறு கூறினார். அவ்வாறே நிலம் வாங்கப்பட்டது. 1929ம் ஆண்டு, ஒரு நாள் சுவாமிகள் தமது சீடர்களை அழைத்து, "மயூர வாகன சேவன விழாவை தொடர்ந்து நடத்தி வாருங்கள். நான் சமாதி அடைந்ததும் என்னுடைய உடலை திருவான்மியூரில் சேர்த்து விடுங்கள்" என்று கட்டளையிட்டார். 30-5-1929 வியாழக்கிழமை காலை 7.15 மணிக்கு, சுவாமிகள் பிராண வாயுவை உள்ளிழுத்து மகாசமாதியில் ஆழ்ந்தனர். இதை அறிந்த அனபர்கள் பலர் சுவாமிகளை வந்து தரிசித்து சென்றனர். மறுநாள் (31-5-1929), சுவாமிகளின் திருமேனியை திருவான்மியூரில் சேர்த்து சமாதிக்கோவில் அமைத்தனர்.

அக்கா சுவாமிகள்

சிவப்பிரகாச அடிகள்

கண்ணப்ப நாயனார்

ஜட்ஜ் சுவாமிகள்

பரமஹம்ச யோகானந்தர்

யுக்தேஸ்வரர்

ராமானுஜர்

ஞானானந்த சுவாமிகள்

ரமண மகரிஷி

ராமகிருஷ்ணர், சாரதாதேவியார்

கமல முனி

சென்னையில் உள்ள ஜீவசமாதிகள்

திருவொற்றியூர்:

பட்டினத்தார்= கடற்கரையை ஒட்டி பட்டினத்தார்கோவில் வீதி.ஆவணி மாதத்தில் வரும் உத்ராடம் நட்சத்திரத்தன்று வருடாந்திர குருபூஜை.

பாடகச்சேரி ராமலிங்கசாமிகள்= பட்டினத்தார் கோவில் வீதியில் இவரது பெயருள்ள மடம்

ஐகோர்ட் சாமி என்ற அப்புடுசாமி= பாடகச்சேரிராமலிங்க சாமிகள் மடத்துள் இருக்கிறது.

அருள்மிகு யோகீஸ்வரர் சாமி=வடிவுடையம்மன்கோவில் அருகில் தட்சிணாமூர்த்தி ஆலயம்ஸ்தாபித்தவர்.

பரஞ்சோதி மகான்= டோல்கேட் பஸ் ஸ்டாப் அருகில் தங்கம் மாளிகை அருகில்.

ஞானப்பிரகாச சாமிகள்= வடக்கு மாடவீதி 145/30 இல்சிவாமிர்த ஞான ஆசிரமத்தில் பஞ்சலோக சிலைபிரதிஷ்டை.

மவுன குரு சாமிகள்= கடற்கரையோரம் சமாதிகோவில்.

முத்துக்கிருஷ்ண பிரம்மம்= ஆஞ்சநேயர் கோவில் பஸ்ஸ்டாப் அருகில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவில்எதிரே சமாதி; கார்த்திகை மாத சதயம்நட்சத்திரத்தன்று குரு பூஜை;

ஞானசுந்தர பிரம்மம்= முத்துக்கிருஷ்ண பிரம்மம்சமாதி அருகில் ஞான சுந்தர பிரம்மம் சமாதி. சித்திரைமாத உத்திராடம் நட்சத்திரத்தன்று வருடாந்திரகுருபூஜை!!

ராயபுரம்:
குணங்குடி மஸ்தான் சாயபு= காய்கறி மார்க்கெட்பின்புறம் பிச்சாண்டி தெருவில் உள்ளது.

ஞானமாணிக்கவாசக சிவாச்சாரியார் சித்தர்=மன்னார்சாமி கோவில் தெரு பழைய பாலம்இறக்கத்தில் உள்ள ருத்ர சோமநாதர் கோவிலில்சமாதி .

வியாசர் பாடி:
சிவப்பிரகாச சாமி=இரவீஸ்வரர்-மரகதாம்பாள்கோவிலில் சமாதி கோவில்.

கரபாத்திர சிவப்பிரகாச சாமி=1 வது தெரு சாமியார்தோட்டம் அம்பேத்கர் கல்லூரி அருகில்.பங்குனிஉத்திராடம் நட்சத்திரத்தன்று வருடாந்திர குருபூஜை!!

பெரம்பூர்:
அந்துகுருநாத சுவாமிகள்=மாதவரம் நெடுஞ்சாலைபிரசன்ன விநாயகர் கோவிலில் சமாதி கோவில்-பஞ்சமுக வடிவமும் உள்ளது.

மதனகோபாலசாமி=மேல்பட்டி பொன்னப்பமுதலிதெரு ஈஸ்வரி கல்யாண மண்டபம் எதிரில் சமாதிகோவில்;

சந்திர யோகி சுவாமி=மங்களபுரம் ஐந்துலைட்அருகில்.

வேர்க்கடலை சுவாமி=அய்யாவு தெரு,திரு.வி.க.நகர்.

மதுரை சாமி=செம்பியம் வீனஸ் தியேட்டர் 2 வதுகுறுக்குத் தெரு வலது பக்கம் மதுரை சாமி மடத்தில்.

மயிலை நடராஜ சுவாமி=கொளத்தூர்- பெரவள்ளூர்செல்லியம்மன் கோவில் பின்புறம்.

ஓட்டேரி:
ஆறுமுகச்சாமி=173/77 டிமலஸ் சாலை,பெரம்பூர்பேரக்ஸ் ரோடு-ஓட்டேரி மயானத்தில் சமாதி கோவில்-உருவப்பட பூஜை.

புரசைவாக்கம்:
வீரசுப்பையா சுவாமி
புவனேஸ்வரி தியேட்டர் எதிரில்-52,பெரம்பூர் பேரக்ஸ்ரோடு மடத்தில் சமாதி கோவில்.

ஈசூர் சச்சிதானந்த சாமி=கொசப்பேட்டை சச்சிதானந்தாதெரு(வசந்தி தியேட்டர் அருகில்) சமாதி கோவில்.

எழும்பூர்:
மோதி பாபா=422,பாந்தியன் சாலை போலீஸ் கமிஷனர்அலுவலகம் எதிரில் தர்கா.
அனந்த ஆனந்த சுவாமி மற்றும் சபாபதிசுவாமி=பாலியம்மன் கோவில் பின்புறம் சாமியார்தோட்டத்தில் இருவரது சாமதி கோவில்-ஐப்பசிதிருவாதிரை நட்சத்திரத்தன்று வருடாந்திர குருபூஜை.

நுங்கம்பாக்கம்:
கங்காத சுவாமி=ஹாரிங்டன் ரோடு 5 வது அவென்யூஜெயவிநாயகர் கோவிலில் சமாதி.

நாதமுனி சாமி=ஹாரிங்டன் ரோடு,பச்சையப்பன்கல்லூரி பின்வாசல் அருகில் நாதமுனி மடத்தில்சமாதி கோவில்.

பன்றிமலை சாமி=5,வில்லேஜ் ரோட்டில்‘ஓம்நமச்சிவாய’என்ற பெயரில் ஆஸ்ரமத்தில் சமாதி.

ஆதிசேஷானந்தா=நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தின் பின்புறம் ஆதிசேஷானந்தா கோவிலில்சமாதி.

வீரமாமுனிவர்=நுங்கம்பாக்கம் புஷ்பா நகர்காவல்நிலையம் எதிரில் அசலத்தம்மன் கோவில்.

கோடம்பாக்கம்:
ஸ்ரீபரமஹம்ஸ ஓங்கார சாமி=அசோக் நகர்-சாமியார்மடம் டாக்டர் சுப்பராயன் நமர் சாமியர் மடம்ஞானோதய ஆலயம்-ஸ்ரீபரமஹம்ஸ ஓங்காரசாமிபீடம்.

வடபழனி:
அண்ணாசாமி,ரத்தினசாமி,பாக்கியலிங்கசாமிகள்=வடபழனி முருகன் கோவில் உருவாக இந்த மூவரும்காரண கர்த்தாக்கள்.இவர்களது சமாதி கோவில்முருகன் கோவில் பின்புறம் நெற்குன்றம் பாதையில்வள்ளி திருமண மண்டபம் அருகில்.

மைலாப்பூர்:
திருவள்ளுவர்-வாசுகி அம்மையார்=லஸ் அருகில்திருவள்ளுவர் கோவிலில்.

அப்பர் சாமிகள்=171,ராயப்பேட்டை ஹைரோடு-சமஸ்க்ருத கல்லூரி
எதிரில்,மைலாப்பூர் அப்பர்சாமிகள் சமாதி உள்ளது.

குழந்தைவேல் சுவாமி=சித்திரகுளம் எஸ்.டி.பி.கில்டுபில்டிங்கில் இருக்கிறது.

முத்தையா சாமிகள்=குழந்தைவேல் சாமிகள் சீடர்-அவரது சமாதி அருகில்.

ஆலந்தூர்:
தாடிக்கார சுவாமி=ஆலந்தூர் ஈ.பி.அலுவலகம்தாடிக்காரசாமி தெரு-பழைய எண்:23-24 இடையேசந்து.உள்ளே தாடிக்கார சாமியின் சிறிய ஜீவ சமாதிகோவில்.சிவலிங்க பிரதிஷ்டை.

குழந்தைவேல பரதேசி=ஆலந்தூர் ஈ.பி.அலுவலகம்பின்புறம் 53,சவுரித்தெரு,எஸ்.ஆர்.மெட்ரிக்மேல்நிலைப் பள்ளி வாயிலுக்குக் கீழ்ப்புறம் சமாதிகோவில்.

கிண்டி:
சாங்கு சித்தர் சிவலிங்க நாயனார்=எம்.கே.என்.ரோடு 36ஆம் எண்-சாங்கு சித்தர் சிவலிங்கநாயனார் சமாதிகோவில்-சிவலிங்க பிரதிஷ்டை.இத்துடன் இவரதுசீடர்கள் ஸ்ரீகொல்லாபுரி சாமி,ஸ்ரீஏழுமலை சாமிகளின்சமாதி,ஆனி மாத பவுர்ணமியன்று வருடாந்திரகுருபூஜை.

சத்யானந்தா கோழீபீ சித்தர்=பஸ் ஸ்டாப் அருகில்உள்ள சாய்பாபா கோவில் வளாகத்தில்.

திருவான்மியூர்:
பாம்பன் சுவாமிகள்-கலா சேத்ரா அருகில் திருமடவளாகத்துள் ஸ்ரீபாம்பன் சுவாமிகள் சமாதிஆலயம்.ஸ்ரீமுருகக்கடவுள் பிரதிஷ்டை.

வால்மீகி=மருந்தீஸ்வரர் கோவில் எதிரில் சிறியகோவில்.
சர்க்கரை அம்மாள்=75,கலா சேத்ரா ரோடு,

வேளச்சேரி:
சிதம்பரச்சாமி என்ற பெரியசாமி=காந்தி சாலைதிருப்பம்-1,வேளச்சேரி மெயின் ரோடு-சிவலிங்கபிரதிஷ்டை.

ராஜகீழ்ப்பாக்கம்:
சச்சிதானந்த சற்குரு சாமிகள்=அகண்ட பரிபூரணசச்சிதானந்த சபையின் சமாதி.

பெருங்குடி:
நாகமணி அடிகளார்=கந்தன் சாவடி பஸ்ஸ்டாப் –நாகமணி அடிகளார் சாலை அம்மன் கோவிலுகுள்.

நங்கநல்லூர்:
மோனாம்பிகை-ஞானாம்பிகை- சாதுராம்
இம்மூவரின் சமாதி பிளாட் 21,பொங்கி மடம்(மாடர்ன்உயர்நிலைப் பள்ளி அருகில்)-ஸ்டேட் பாங்க் காலனி

சிட்லப்பாக்கம்:
சாயி விபூதி பாவா= 83,முதல் மெயின்ரோடு,ஹெச்.சி.நகர்-சிட்லப்பாக்கம் பாலம் இறக்கத்தில்சமாதி கோவில்-அருகில் குமரன் குன்றம்மலைக்கோவில்.

ஊரப்பாகம்:
 எதிராஜ ராஜயோகி-ஊரப்பாகம் அருகில் கரணைபுதுச்சேரியில் இவரது சமாதி கோவில் இருக்கிறது.

படப்பை:
துர்கை சித்தர்-ஜெயதுர்கா பீடம் கோவில்.

பெருங்களத்தூர்
ஸ்ரீமத் சதானந்தசாமி- ஆலம்பாக்கம்சதானந்தபுரம்- பெருங்களத்தூரில் சமாதி கோவில்.

புழல்
கண்ணப்ப சாமி
புழல் சிறைச்சாலையை அடுத்து காவாங்கரையில்கண்ணப்பசாமிகள் ஆசிரமம்;ஜீவசமாதி மேடை மீதுசாமிகள் அமர்ந்த கோலத்துடன் காட்சியளிக்கிறார். இவருக்கு அருகில் இவரது சீடர்கோவிந்த சாமியின் ஜீவசமாதி.

காரனோடை
மல்லையா சாமிகள்
காரனோடை தாண்ட குசஸ்தல ஆற்றுப்பாலத்தின் கீழ்வடகரையில் சமாதிகோவில்அமைந்திருக்கிறது.இங்கு சாமிகளின் சிலைகருங்கல்லால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

அந்தணர் அண்ணல் ஞானாச்சாரியார்
காரனோடை கோபிகிருஷ்ணா தியேட்டர் எதிரில்ஆத்தூர் சாலையில் இவரது சமாதி கோவில்இருக்கிறது.பிரதி ஆவணி மாதம் வரும் முதல் நாள் வருடாந்திர குருபூஜை விழாநடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
அலமாதி மார்க்கண்டேய மகரிஷி அலமாதீஸ்வரர் கோவிலுக்குள் சமாதிஅமைந்திருக்கிறது.

கோவணச்சாமி
அலமாதீஸ்வரர் கோவில் அருகில் சமாதி இருக்கிறது.

பூதூர்
ஷா இன்ஷா பாபா
செங்குன்றம் வடக்கே சோழவரம் டூ ஓரக்காடுரோட்டில் 6 கி.மீ.பூதூர் கிராமம் இருக்கிறது.இந்தகிராமத்தின் மேற்குப்பகுதியில் தர்கா உள்ளது.
பஞ்சேஷ்டி

புலேந்திரர்(சித்தர்களின் தலைவர் அகத்தியரின் சீடர்)
ரெட் ஹில்ஸ்  டூ பொன்னேரி நெடுஞ்சாலையில்ஜனப்பன் சத்திரம் கூட்டுரோடு தாண்டி பஞ்சேஷ்டிதிருத்தலத்திலுள்ள அகத்தீஸ்வரர் ஆலயத்தினுள்ஜீவசமாதி உள்ளது.இங்கு இருக்கும்இஷ்டலிங்கேஸ்வரர் என்ற பெயரில் சிவலிங்கம்பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

அம்பத்தூர்
ஐயா சூரியநாத கருவூரார்
பதினெண் சித்தர் மடம்,13,குமாரசுவாமிதெரு,வரதராசபுரம்,அம்பத்தூர்.பிரதி அக்டோபர் 10 ஆம்தேதி வருடாந்திர குருபூஜை விழாநடைபெற்றுவருகிறது.

வடதிருமுல்லைவாயில்
அன்னை நீலம்மையார்
37/1 வடக்கு மாடவீதி மாசிலாமணி ஈஸ்வரன் கோவில்அருகில் ஜீவசமாதி இருக்கிறது.பிரதி கார்த்திகைமாதம் வரும் மிருகசீரிடம் நட்சத்திரத்தன்றுவருடாந்திர குருபூஜை விழா நடைபெற்றுவருகிறது.

மாசிலாமணி சுவாமிகள்
சோளம்பேடு தாமரைக்குளம் ஆஞ்சநேயர் கோவிலில்ஜீவசமாதி அமைந்திருக்கிறது.

பூந்தமல்லி
கர்லாக்கட்டை சித்தர்
வைத்தீஸ்வரன் கோவிலில் சிவன் சந்நதிக்குவலப்புறம் தூணில் உள்ளார்.

பைரவ சித்தர்
பஸ்நிலையம் எதிரில் உள்ள வரசித்தி விநாயகர்கோவிலில் ஜீவசமாதி இருக்கிறது.

கருடகோடி சித்தர்
பூந்தமல்லி தண்டரை சாலையில் அமைந்துள்ளசித்தர்காட்டிலிருந்து 1 கி.மீ.தூரத்தில்சுந்தரவரதபெருமாள் கோவில் தெப்பக்குளஇடப்பாகத்தில் ஜீவசமாதி கோவில் இருக்கிறது.

ஸ்ரீபெரும்புதூர்:
அருள்வெளி சித்தர்
பூதேரிபண்டை கிராமம்= வி.ஜி.பி.ராமானுஜகிராமத்தில் ஜீவசமாதி இருக்கிறது.உயரமான சமாதிமேடை.சுவாமிகளின் சிலை பிரதிஷ்டைசெய்யப்பட்டுள்ளது.

வெள்ளறை கிராமம்
ராஜராஜ பாபா சித்தர்
கொளத்தூர் சமீபம் வெள்ளறை கிராமத்தில்அமைந்துள்ளது.

மாங்காடு :
சர்வசர்ப்ப சித்தர்
மாங்காடு டூ போரூர் சாலையில் பேரம்புத்தூர் அருகில்கோவிந்தராஜா நகரில் ஸ்ரீசிவசித்தர் கோவிலில்ஜீவசமாதி இருக்கிறது.
 புதுப்பட்டிணம்(ஈ.சி.ஆர்)

மாயவரம் சித்தர்சாமி & மாதாஜி சித்தர்
ஈ.சி.ஆர்.சாலை புதுப்பட்டிணம் அருகே மாயவரம்சித்தர்சாமி மற்றும் 18 சித்தர் திருவுருவங்கள்இருக்கின்றன.இருவருக்கும் ஜீவசமாதி கோவில்இருக்கிறது.

கோவளம் 
ஆளவந்தார் சாமி
கோவளம் டூ நெமிலி வி.ஜி.பி.தாண்டி பீகாவரம்அருகில் இருக்கும் நெமிலியில் இவரது ஜீவசமாதிஇருக்கின்றன.

திருக்கழுகுன்றம் :
குழந்தை வேலாயுத சித்தர்
செங்கல்பட்டிலிருந்து வடக்கே 12 கி.மீ.தூரத்திலுள்ளதிருக்கச்சூரில் சிறிய மலையில் மருந்தீஸ்வரர்கோவில் அருகே ஜீவசமாதிக் கோவில் அமைந்திருக்கிறது.

 அப்பூர்=பதஞ்சலி சுவாமி
திருக்கச்சூர் டூ ஓரகடம் இடையே அமைந்துள்ள அப்பூர்பஸ்நிலையம் அருகில் கருமாரியம்மன் புதுக்கோவில்அகஸ்தீஸ்வரர் ஆஸ்ரமத்தில் ஜீவசமாதி இருக்கிறது.

திருப்போரூர் :
சிதம்பரச்சாமி
திருப்போரூரிலிருந்து 2 கி.மீ.கண்ணகப்பட்டுஉள்ளது.இங்கே சிதம்பரசாமிகள் மடாலயம்நடுப்பகுதியில் ஜீவசமாதியின் கருவறையில்சிவலிங்கப்பிரதிஷ்டை  செய்யப்பட்டுள்ளது.பிரதிவைகாசி மாத பவுர்ணமியன்று வருடாந்திர குருபூஜைவிழா நடைபெற்றுவருகிறது.

செம்பாக்கம் :
இரட்டை சித்தர்கள்
செங்கல்பட்டு டூ கூடுவாஞ்சேரி சாலையில்செம்பாக்கம் ஸ்ரீபொன்னம்பல சாமிகள் மற்றும்ஸ்ரீதிருமேனிலிங்க சாமிகள் ஆகியோரது ஜீவசமாதிகள்உள்ளன.

கூடுவாஞ்சேரி :
மலையாள சாமி
கூடுவாஞ்சேரி நந்திவரத்தில் காசிவிஸ்வநாதர்கோவில்பின்புறம் ஜீவசமாதி இருக்கிறது.அருகில்இருக்கும் வயல்வெளியில் தியாகராய சாமி ஜீவசமாதிஇருக்கிறது.

அச்சரப்பாக்கம் :
முத்துசாமி சித்தர்
அச்சிறுப்பாக்கம் டூ கயப்பாக்கம் சாலையில் 8கி.மீ.தூரத்தில் நடுப்பழனி முருகன் கோவில் உள்ளகுன்று இருக்கிறது.இந்த முருகன் கோவில் வெளியேசன்னதிக்கு வடபுறம் முத்துச்சாமி சமாதி மண்டபம்இருக்கிறது.இங்கே சிவலிங்கம் பிரதிஷ்டைசெய்யப்பட்டுள்ளது.

தெரிந்துகொள்ளுங்கள் நாம் இருக்கும் சென்னையிலெயே இவ்வளவு ஜீவ சமாதிகள் என்று.