Sunday, 18 September 2016

முன்னோர்கள் எழுதிய கலியுகம் பற்றி

ஆணுக்குப் பெண் வித்தியாசமற்று தோற்றத்திலும் செயலிலும் ஒன்றுபட்டுப் போகிறது.

ஒருவனுக்கு ஒரு மனைவி என்ற நிலை கெடும்.

அரசே பெண்களின் கருச்சிதைவுக்கு ஆதரவும் ஊக்கமும் அளிக்கும்.

விதவை மறுமணம் செய்து கொள்வாள்.

பெண்களின் தூய்மை, நாகரிகம் என்னும் மாயவசத்தால் அழிந்துபடும்.

மகன் தந்தையையும், தந்தை மகனையும் மோசம் செய்வர்; பந்த பாசங்கள் அற்றுப் போகும்.

கணவனை நிந்தித்து துன்புறுத்தும் மனைவியும், பெற்ற தாய் தந்தையரைப் பேணாத மக்களும் பெருகிவிடுவர்.

பெற்ற மக்களையே விற்றுப் பிழைக்கும் நிலை பெற்றோருக்கு ஏற்படும்.

அழகுடைய மங்கையர் விலைபொருளாகி விற்பனைக்கு உள்ளாகுவர்.

திருமணங்கள், குலம் கோத்திரமின்றி நடைபெறும். அதற்கு அரசே ஆதரவு அளிக்கும்.

உயர்குலப் பெண்கள் நாட்டியம், பாட்டு, கச்சேரி, நிழற்படம் என்ற மோகத்தில் கெட்டழிவர்.

தெய்வ நம்பிக்கை தளர்வடையும்.

தெய்வ வழிபாடு செய்வோருக்கு தரித்திரம் மிகுதியாகும்.

குலத்தொழில்கள் மாறுபடும்.

ஆலயங்களில் கள்ளத்தனம் நிறையும். ஆலயங்களில் பிராமணர்களுக்குப் பதிலாக தாழ்த்தப்பட்ட குலத்தோர் அர்ச்சகர்களாக மாறுவர்.

சைவர்கள் வேத சாரத்தை விட்டு விலகுவர்; மாமிசம் போன்ற அசைவ உணவுகளை உட்கொள்ளுவர்.

சாத்திரங்கள் பொய் என வாதிடப்படும். வேதங்களின் பொருள் மாற்றமடையும்; (வேதங்களில் எத்தனையோ இடைச் செருகல்கள் ஏற்பட்டு விட்டன என்பது சரித்திரம் கண்ட உண்மை.) வேதம் ஓதுவேர் வேதங்களைத் தம் சுயநலம் கருதி வியாபாரமாக்குவர்.

திருப்பதி ஆலயச் செல்வங்கள் திருடிச் செல்லப்படும்.

அரசர்களின் ஆளுகைக்கு மாறாக மக்களாட்சி உலகெங்கும் ஏற்படும்.

ஆனால் நடைமுறையில் அவை அராஜக வழியை பின்பற்றும்.

முஸ்லீம்களின் ஆதிக்கமும் அரசும் பாதிப்படையும்; வஞ்சனைகள் தலைதூக்கும்.

புதுவித அரசியல் அமைப்புகள் ஏற்படும்; தவறான முறையில் மக்கள் நடத்தப்பட்டு அதன் காரணமாக மக்களின் நிலை சீர்கெட்டுப் போகும்.

மனிதன் பறவைகள் போல ஆகாயத்தில் பறப்பான். ஆனால், அவன் பார்வை கழுகுகள் போலே கீழ்நோக்கி மாய மலங்களிலேயே மோகம் கொள்ளும்.

நிழற்படங்கள் அசைந்தாடும்; அது தர்மவழிகளை அழிக்கும்.

குதிரை, மாடுகள் வழி நடத்தும் வாகனங்களுக்கு மாறாக இயந்திர வாகனங்களும் அதிதுரிதப் போக்குவரத்தும் நடைபெறும்.

இயந்திரங்கள் நன்மைக்காக அறிவின் பலத்தால் பெருகிடினும், மனிதன் மனிதனாக இல்லாது இயந்திரமாக மாறி நல்லுணர்வுகளை இழப்பான்.

இவ்வுலகில் நியாங்கள் செயலற்றுப் போகும் அநியாயங்களே தலையோங்கி நிற்கும்.

உண்மகள் பொய்யாகும்; பொய்மைகள் உண்மையாகத் தோன்றும்.

நல்லவைகளுக்குப் பெருமை அற்றுப் போகும்; இவ்வுலகின் கண் தீமைகளுக்கே முதலிடம் அளிக்கப்படும்.

பொருளாசை மக்களை மிருகமாக்கி, கொலை வெறியைத் தூண்டிவிடும்.

மனிதருள் போட்டி பொறாமை பெருகி ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டு தாழ்வடைவர்.

ஒருவர் பொருளை மற்றவர் அபகரித்துச் செல்வர்.

சாந்தம் குறையும்; கோபம் அதிகரிக்கும்.

கபட வேடதாரிகளால் மக்கள் ஏமாற்றப்படுவர்.

போதைப் பொருள்கள் பெருகி, மக்கள் அதன் வாய்ப்பட்டு பெருவாரியாக அழிந்து போவார்கள்.

உணவுப் பொருள்களின் தரம் குறைந்து, அற்ப லாபம் கருதி கலப்படம் செய்து விற்பனைக்கு வருவது பெருகும். அதனால் புதிய புதிய நோய்கள் பரவும். கண்பார்வை மிகையாக கெடும்.

எண்ணற்ற ரோகங்கள் புதிது புதிதாகத் தோன்றி மக்களை அழிக்கும். மக்களின் சராசரி வயது குறையும்.

செம்பு, பித்தளை போன்ற உலோகங்களால் தயாரிக்கப்பட்ட நகைகள் போன்ற பொருட்களுக்குத் தங்க  முலாம் பூசப்பட்டு அவை தங்கம் என்று மக்களிடம் ஏமாற்றப்பட்டு விற்கப்படுகின்ற நிலை ஏற்படும்.

முன்னேற்றம் உள்ளது போல் தோன்றினாலும் மனிதனின் குணங்கள் விகாரப்பட்டு அழிவை தனக்குத்தானே தேடிக் கொள்வான்.

மூன்று தலைகொண்ட பசுங்கன்று ஜனிக்கும். அதற்கு இரண்டு யோனிகள் இருக்கும். அவைகளில் ஒன்று மனிதத் தன்மை கொண்டதாக இருக்கும்.

நமது பாரத தேசம் இரண்டாகப் பிளக்கப்படும்; பிறகு அது மூன்று பாகங்களாகும். (இந்தியா, பாகிஸ்தான், வங்காள தேசம்) வங்காள தேசம் என்னும் பிரிவு, பல உயிரிழப்பிற்கும், புயலுக்கும், பெருவெள்ளத்திற்கும் ஆளாகும்.

மக்களின் சேதம் மிகையாகும். பாரத தேசத்தில் மக்களின் ஜனத்தொகை அளவுக்கு அதிகமாகப் பெருகிவிடும். அப்போது ஜனத்தொகையைக் குறைக்க அரசு செயல்படும்.

இவ்வுலகில் பல பாகங்களில் பூகம்பங்களும் விஷ சக்திகளும் ஏற்பட்டு பெரும் அழிவும் உயிர்ச் சேதங்களும் ஏற்படும்.

இயற்கையின் பருவகாலங்கள் நிலைகெட்டுப் போகும்; பருவங்கள் கடந்து மழை பொழியும்.

இயற்கை வளங்கள் எல்லாம் விஷக்காற்றால் அழிவு பெறும்.

நிலமகளிடம் ஆழ்ந்திருக்கும் செல்வங்கள் மக்களின் சுக போகத்திற்கு வெளிக்கொணரப்படுவதால் நிலமகள் பலமிழந்து நிலநடுக்கங்களும், பெருத்த பூகம்பங்களும் ஏற்படும். எரிமலை வெடித்து உலகை அழிக்கும்.

கலியின் முடிவு பிரளயமாகி உலகே அழியும். அதன் காரணமாகப்  பெருவெள்ளங்கள் தோன்றி ஊரையும் மக்களையும் அழிக்கும்.

Wednesday, 7 September 2016

ஏழு முனிவர்

அகத்தியன், புலத்தியன், அங்கிரா, கெளதமன், வசிட்டன், காசிபன், மார்க்கண்டன்

ஆறு உட்பகை

காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாற்சரியம்

ஏழு நதி

கங்கை, யமுனை, நருமதை, சரசுவதி, காவேரி, குமரி, கோதாவரி

ஏழு நரகம்

கூடசாலம், இரெளரவம், கும்பிபாகம், பூதி, அள்ளல், செந்து, மகாபூதி

ஏழுகடல்

உப்புக்கடல், கருப்பஞ்சாற்றுக்கடல், மதுக்கடல், நெய்க்கடல், தயிர்க்கடல், பாற்கடல், (சுத்தநீர்க்கடல்) வெள்ளைநீர்க் கடல்

ஏழுகீழுலகம்

அதலம், விதலம், சுதலம், தராதலம், இரசாதலம், மகாதலம், பாதலம்